English தமிழ்

Share the Article

அன்புள்ள விவசாயிகளே! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் இளைஞர்களிடமிருந்து நிறைய மெயில்கள் வருகின்றன. அவற்றில், அவர்கள் விவசாயம் தொடர்பான தொழில் முனைவதற்கான வாய்ப்புகள் குறித்து சரியான தகவல்களைத் தந்து வழிகாட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இது என்னை மிகவும் யோசிக்க வைத்துள்ளது.

கிராமப்புற இளைஞர்களுக்காக நூற்றுக்கணக்கான திட்டங்கள் வேளாண் துறையிலும் கிரிஷி விஞ்ஞான் கேந்திராவிலும் உள்ளன. ஆனால் சரியான விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என நம் இளைஞர்கள் முனையும்போது, எங்கு அதனைத் தேட வேண்டும் என அவர்களுக்குத் தெரியவில்லை. இணையத்தில், கூகுளில் சென்று தேடினால், இந்தியாவில் எத்தனை சதவீதம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர்,  அவர்களில் எத்தனை சதவீதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர் என்ற தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.

இந்த தகவலை நீங்கள் எந்த தொழில்நுட்பனரிடமோ அல்லது விவசாய நிபுணர்களிடமோ பேசினால் அவர்களில் 90 சதவீதம் பேர்,விவசாயத்தில் இளைஞர்கள் லாபகரமாக தொழில் செய்ய  பலவிதமான தொழில்களும் அதுகுறித்த பயிற்சிகளும் இருக்கின்றன என்று சொல்வார்கள். ஆனால்  நூற்றில் ஒருவர் கூட, எத்தனை வகையான தொழில்கள் இருக்கின்றன, தொழில்முனைவோரின் வெற்றி பெற்றது குறித்த ஆய்வுகள்  என சரியான தகவல்களை கொடுக்கமாட்டார்கள். அதுமட்டுமில்லாமல், ஒரே தொழிலை செபலர் திரும்பத் திரும்ப செய்த போது வெற்றி பெற்றார்களா என்பது குரித்து திட்டவட்டமாக எதையும் கூற மாட்டார்கள்.

இன்று விவசாயத்துக்குத் தேவைப்படுவதெல்லாம், துடிப்பும் தொலைநோக்கும் கொண்ட ஒரு தலைமை.

விவசாயமும் விவசாயம் தொடர்பான தொழில்களும் அத்தனை எளிதானது அல்ல என்பது நம் அனைவருக்குமே தெரியும். விவசாயம் உடல் உழைப்பை அதிகமாக கோரும்; இதில் சவால்களும் அதிகம். அரசும் வேளாண் பல்கலைக் கழகங்களும் இளைஞர்களுக்கு  இத்துறையில் நிறைய வேலை வாய்ப்புகள் இருப்பதாகக்  கூறிக்கொண்டுள்ளன.

வேளாண் துறையும் வேளாண் மற்றும் கால்நடை பல்கலைக் கழகங்களும் தங்களது கிரிஷி விஞ்ஞான் கேந்திரா மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு பால் பண்ணை, மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல தொழில்களை வழங்கி வருகின்றன.  சூரியனுக்குக் கீழ் உள்ள அனைத்து விஷயங்களிலும் பண்ணை சார்ந்த தொழில்கள் நிறைய உள்ளன. விருப்பம் உள்ள இளைஞர்கள் கேவிகே-நிலையத்தில் தங்களுக்கு விருப்பமுள்ள துறையைத் தேர்ந்தெடுத்து பயிற்சி பெறலாம். மதிப்பு கூட்டல், கோழி வளர்ப்பு, பால் பண்ணை என எதை வேண்டுமானாலும் டுதேர்ந்தெடுக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறைக்கு கேவிகே-யில் வடிவம் பெற்ற பயிற்சிகள் உள்ளன. நீங்கள் அருகிலுள்ள கேவிகே அல்லது வேளாஅன் துறையை நேரில் சென்று தொடர்புகொண்டு எனது தகவல்களை உறுதி செய்துகொள்ளலாம்.

ஆனால் இப்பயிற்சிகளில் உள்ள முரண் என்னவென்றால், இதிலுள்ள சவால்கள் குறித்து திறந்த மனதுடன் பேசமாட்டார்கள். உதாரணத்துக்கு பருவ மழை பொய்த்துப் போனால் என்ன செய்வது, வங்கியில் கடன் கிடைக்காதபட்சத்தில் அடுத்த செய்ய வேண்டியது என்ன? குறிப்பிட்ட சிக்கலுக்கு யாரை, எங்கு தொடர்புகொள்வது?  என்பது போன்ற நடைமுறைச் சிக்கல்களுக்கு அவர்களிடம் பதில் இருக்காது. பயிற்சி கொடுக்கப்படும் பாடத்திட்டங்கள் பல காலாவதியானவை. மேலும் நடைமுறைக்கு சாத்தியமற்றவை.

அரசு, இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்த வேண்டும் என விரும்பினால் அதற்காக உறுதியான திட்டம் அவர்களிடம் இருக்க வேண்டும். இதில் முரண் என்னவென்றால் அரசுக்கும் எப்படி செய்வது என்று தெரியாது;இளைஞர்களை வழி நடத்த வேண்டிய அரசு அதிகாரிகள், தொழில்நுட்பாளர்களுக்கும் வழிகாட்டத் தெரியாது. நிலைமை இப்படி இருக்கும்போது விவசாயம் செய்து பல வகையில் நொடித்துப் போன விவசாயி தந்தையைப் பார்த்த அவரது மகன் யாரும் உதவி செய்யாத நிலையில் எப்படி விவசாயத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்க முடியும்? நாம் இதனை மேடைகளிலும் கூட்டங்களிலும் தான் பேச முடியும்.

அன்புள்ள நண்பர்களே! இதில் துயரார்ந்த விஷயம் என்னவென்றால், விவசாயியையோ அவரது விவசாயம் குறித்தோ அக்கறை கொள்ள யாருமில்லை. நாம் நமது பள்ளி காலத்திலிருந்து இந்தியா ஒரு விவசாய நாடு, இந்தியா கிராமங்களில் தான் வசிக்கிறது என படித்து வருகிறோம். ஆனால் நம்மில் எத்தனை பேர், விவசாயி அவர் உற்பத்தி செய்யும் பொருளுக்கு ஏற்ற விலை பெற வேண்டும் என அக்கறைகொண்டிருப்போம்? நகரத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் பதட்டமடையும் நாம் கிராமத்தில் விவசாயிக்கு இதே தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் என்ன செய்வார் என யோசித்திருப்போமா? நீங்கள் ஏதேனும் விவசாய இளாஇய தளாத்துக்கு சென்று பார்த்தால் அதில் விவசாயத்தில் உள்ள சாத்தியக்கூறுகள் அல்லது வெற்றி பெற்றவர்களின் கதைகள் இருக்கும். அதனை ஒரு பூத கண்ணாடி கொண்டு நோக்கினால், அது உண்மைக்கு வெகுதூரத்தில் இருக்கும். இதுதான் நம் விவசாயிகள் மற்ரும் அவரது வாரிசுகளின் இன்றைய நிலை.

இன்று விவசாயத்துக்குத் தேவைப்படுவதெல்லாம், துடிப்பும் தொலைநோக்கும் கொண்ட ஒரு தலைமை. பழைய தலைமைகளைக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாது. ஒவ்வொரு நாளும் பிரச்சனை சிக்கலாகவும் பரந்தும் சென்றுகொண்டுள்ளது. கிராமங்களில் இருக்கும் பெரிய எண்ணிக்கையிலான இளைஞர்களை  ஒன்றிணைத்து அவர்களின் ஆற்றலைப் பயன்படுத்து விவசாயத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இதற்கு நிறைய உழைப்பும் காலமும் தேவைப்படும். இதற்கு நமக்கு துடிப்புள்ள ஒரு முன்னுதாரணம் வேண்டும்; அவருக்கு நிறைய பொறுமையும் நேரமும் தேவைப்படும்.

நாம் வேளாண் முறைகளை சிதைத்துவிட்டோம். ஆற்றிலிருந்து மணலைத் திருடினோம்; நிலத்தடி நீரை அதீதமாக உறிஞ்சிவிட்டோம்;ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிவிட்டோம்.  அரசு பதவிகளுக்கு லஞ்சம் பெறும் அமைச்சர்களைப் பெற்றுள்ளோம். திறமையற்ற வேளாண் அதிகாரிகள், முதன்மை பணிகளில் உள்ளனர். இத்தனை குறைகளை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்துகொண்டு, விவசாயம் வருமானமற்றது என புகார் கூறுகிறோம். ஆமாம்…எப்படி விவசாயம் வருமானமுள்ளதாக மாறும்? யார் இதை மாற்றுவார்கள் என்பதுதான் நம் முன் நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி.


Share the Article