Read in : English

Share the Article

இந்திய சாப்பாட்டுப் பிரியர்களின் முக்கிய உணவு பிரியாணி. தமிழ்நாட்டில் பிரபல ஹோட்டல்களிலிருந்து சாதாரண தெருவோரக் கடை வரை பிரியாணி பிரபலமானது. நயன்தாரா விக்னேஷ்-சிவன் திருமணத்துக்கு வந்த விருந்தினர்களுக்கு பலாப்பழ பிரியாணி பரிமாறப்பட்டது. இதிலிருந்தே பிரியாணி மகத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.

பாரசீகத்தில் இருந்து மொகலாயர்களினால் இங்கு வந்த பிரியாணி, இந்திய சாப்பாட்டு பிரியர்களின் முதல் 10 உணவுக்குள் நிச்சயமாக இருக்கும். பிரியாணி ஒரு மிக சத்தான உணவு. விலை உயர்ந்த உணவும்கூட. மிதமான வெப்பத்தில் அதைச் சமைக்கும்போது அதனுடன் சேர்க்கப்படும் சுவையான வாசனை உணவு பொருள்கள் அரிசியுடன் சேர்ந்து மிக அற்புதமான கலவை ஆகிறது.

வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப சேர்க்கப்படும் சுவையான வாசனைப் பொருள்களின் சேர்ப்பு மாறுபடும்.. உதாரணத்திற்கு கோழிக்கறி, ஆட்டுக்கறி, முட்டை, மீன், இறால் போன்றவையும் பிரியாணி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. காய்கறிகளும் பலாப்பழமும்கூட பயன்படுத்தப்படுகின்றன.

இந்திய சாப்பாட்டுப் பிரியர்களின் முக்கிய உணவு பிரியாணி. தமிழ்நாட்டில் பிரபல ஹோட்டல்களிலிருந்து சாதாரண தெருவோரக் கடை வரை பிரியாணி பிரபலமானது

பிரியாணி தயாரிப்பின் அதிமுக்கியமான தேவை என்னவென்றால், சரியான விகிதாசாரத்தில் கலக்கப்பட்ட பொருள்களை சரியான மற்றும் மிதமான வெப்பத்தில் சமையல் செய்யப்பட்டு அந்தந்த வாசனை பொருளின் சுவை வெளிப்படச் செய்ய வேண்டும் என்பதே ஆகும். இது சமையல் கலையில் கைதேந்தர்வர்களின் கைவண்ணம் என்றே கூறலாம். பிரியாணி சேர்க்கப்படும் இந்த சுவையான வாசனை பொருள்களும் அதற்கேற்ற அரிசி ரகமும் இந்த பிரியாணிக்கு மேலும் சுவையூட்டுகின்றன.

மேலும் படிக்க:

சிறு தானியங்கள் உடலுக்கு நல்லதுதான், எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்கள்: எப்படிச் சாப்பிட வேண்டும்?

பிரியாணி

(Photo Credit: Jahnvi Singh – Flickr)

சமைக்கும் பக்குவத்திற்கு ஏற்ப, பிரியாணி பல வகையாக வரிசைப்படுத்தலாம். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், திண்டுக்கல் பிரியாணி – தனிப்பட்ட சுவை உயர்ந்த வகை வாசனைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. ஹைதராபாத் பிரியாணி – அதிக காரச்சுவை கொண்டது. பெங்களுர் பிரியாணி கொத்தமல்லி, புதினா சுவையுடன் இருக்கும். மலபார் பிரியாணி – சற்று காரம் குறைவாவு. ஆனால் மிகுந்த வாசனை. கல்கத்தா பிரியாணி – உருளைக்கிழங்கு சேர்க்கப்படுகிறது.

பம்பாய் பிரியாணி – இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆரம்ப கால மொகலாய பிரியாணி மாமிசத்துடன் வாசனை பொருட்களுடன் சமைக்கப்படும். காம்பூரி பிரியாணி காய்கறி மற்றும் இறைச்சி சேர்த்தே சமைக்கப்படும். அந்தந்த பகுதியில் பிரபலமாக உள்ல பிரியாணிகள் அந்தந்த பிராந்தியத்தின் தனிப்பட்ட சுவையை நிலை நாட்டும்..

பிரியாணியில் சேர்க்கப்படும் சத்து உடலுக்கு நல்லது. உதாரணத்திற்கு இஞ்சியில் உள்ள மிக முக்கியமான சத்தானது, Gingerol என்பதாகும். பூண்டில் Allicin, கிராம்பில் Eugeno, இலவங்கப் பட்டையில் Oldehyde மஞ்சளில் curcumin ஏலக்காயில் limonene வெங்காயத்தில் quercetin பாஸ்மதியில் querceti சத்தும் உள்ளன. கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, முட்டை மற்றும் மீனிலிருந்து புரதச் சத்து கிடைக்கிறது.

இதைத்தவிர, பிரியாணியில் சேர்க்கப்படும் வாசனைப் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தும். உடலில் உஷ்ணத்தைக் குறைக்கும். இப்படி பிரியாணி மகத்துவத்தைக் கூறிக்கொண்டே போகலாம். ஆகவே பிரியாணி ஒரு மகா சத்தான உணவு. எடை குறைவானவர்களின் எதிர்பார்ப்பை சமன் செய்கிறது. ஒரு சராசரி ஆரோக்கிய நிலையில் உள்ள நபர், தன்னுடைய உடல் கொழுப்பு சக்தியை நிலையாக வைத்திருக்க பிரியாணி உண்ணும் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும். கொழுப்பு சக்தி நமக்குக் கட்டாயம் தேவை.

ஆனால் அந்த கொழுப்பானது, சரியான முறையில் ஜீரணிக்கவில்லை என்றால் அது நம் உடல் எடையை அதிரித்துவிடும் அபாயம் உள்ளது. ஒரு கிராம் கார்போஹைடிரேட் சத்தாதனது 4kcal, ஒரு கிராம் புரதம் 4kcal, ஒரு கிராம் கொழுப்பு 9kcal கொடுக்கிறது. பிரியாணி சாப்பிடும்போது, இந்தக் கணக்கை கொண்டு நம் உடலில் உள்ளேறும் கலோரி மதிப்பை அளவிட முடியும்.

ஆகவே, பிரியாணி உண்ணும் முறையின் சரியான வழியை நாம் முக்கியமாக உணர வேண்டும். அந்த முறையை பின்பற்றி கலோரியின் அளவை குறைத்து அதே சமயத்தில் எப்படி ரசித்து பிரியாணி உண்பதை பார்க்கலாம். குறைந்த அளவு அரிசி சேர்த்து அதிக அளவு காய்கறி வகைகளையும், மேலும் மாமிச உணவு வகைகயான ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சியோ அல்லது மீன் வகைகளை சிறு சிறு துண்டுகளாக சேர்த்துக் கொண்டு கலோரி அளவை குறைக்கலாம். உதாரணத்திற்கு, அதிக எண்ணை சேர்ந்த கறிவகையோ அல்லது அதிக எண்ணையில் பொரிக்கப்பட்ட உணவு வகைக்கு மாற்றாக காய்கறி பச்சடி, குறைந்த அளவு கொழுப்புள்ள தயிர் கொண்டு தயாரிக்கப்படுவதை சேர்க்கலாம்.

இதைவிட இன்னும் அதிக ஆரோக்கியமானது எது? பச்சை வெங்காயத்தை துண்டாக நறுக்கி உங்களின் விருப்ப பிரியாணியுடன் சேர்ந்து உண்ணலாம். பச்சை வெங்காயத்தின் மிகச்சிறந்த குணம் என்னவென்றால்? அது இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. உங்கள் பிரியாணி அதிக அளவு எண்ணெய் சேர்த்து சமைக்கப்பட்டது என்றாலும், வெங்காயம் குளோஸ்டர் குறைய உதவுகிறது. வெங்காயத்தில் உள்ள கந்தக சத்தானது இரத்தத்தை உறையவிடாமல், அது சரியான பாயும் தன்மையுடன் இருக்கும் உதவும் என்று ஒரு ஆராய்ச்சியில் (Thrombosis Research Journal)) தெரிய வந்துள்ளது.

பிரியாணி ஒரு மகா சத்தான உணவு. எடை குறைவானவர்களின் எதிர்பார்ப்பை சமன் செய்கிறது. ஒரு சராசரி ஆரோக்கிய நிலையில் உள்ள நபர், தன்னுடைய உடல் கொழுப்பு சக்தியை நிலையாக வைத்திருக்க பிரியாணி உண்ணும் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும்

இதைத்தவிர, பலவகையான வேதிப்பொருள்கள் (Disulfides, Trisulfide, Cepane and , Vinyldithrins) இருப்பதை உறுதி செய்துள்ளது. இவை எல்லாம் நம் உடலை மிகச்சிறந்த ஆரோக்கிய நிலையில் வைத்திருக்க உதவும். புற்றுநோய் மற்றும் நுண்ணுயிர் பொருள்களின் நோய் தாக்குதலிலிருந்து நம்மை பாதுகாக்கிறது என்று தேசிய வெங்காய நிறுவனம் கூறுகிறது. தினமும் குறைந்தபட்சம் 200கிராம் வெங்காயத்தை இரண்டு மாத காலம் சாப்பிட்டால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும் என்பது தான்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண மெனு

ஆகவே நாம் இந்த விஞ்ஞானபூர்வ கண்டுபிடிப்புகளின் துணையோடு, நம்மை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு பிரியாணி உண்ணலாம். இல்லாவிட்டால் நாம் உண்ணத்தகாத உணவு வகைகளில் பிரியாணியை சேர்க்கும் வாய்ப்பு உண்டாகலாம். இது முதல் யோசனை.

இரண்டாவதாக பிரியாணி உண்டு முடித்த பின் மிதமான வெப்பத்தில் உள்ள பட்டையால் செய்யப்பட்ட டீயை குடிப்பது கொலஸ்ட்ரால் அளவு குறைய உதவும். இது உங்கள் நாவில் ஒட்டிக் கொண்டுள்ள பிரியாணி சுவையை மறையச் செய்யலாம். ஆனால் முக்கியமாக உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும். மூன்றாவது உங்கள் உடலின் கலோரிகளை நீங்கள் உடற் பயிற்சி மூலமாக எரித்து உடலை சிக்கென வைத்துக் கொண்டால், வாரம் ஒரு முறைக்கு மேலாக உங்களுக்கு பிடித்தமான பிரியாணி உண்ணலாம்.

நான்காவது உண்ணா நோன்பு கடைபிடிக்கும் காலங்களில் பிரியாணி உட்கொள்ளும் தருணங்களை சரியாக வைத்தால் உடல் எடை கூடாது. ஐந்தாவது பிரியாணி தயாரிக்கும்போது எண்ணெய் மற்றும் நெய் உபயோகத்தைத் தவிர்த்து, ஆலிவ் எண்ணையைப் பயன்படுத்தலாம். ஆறாவது உண்ணும் பிரியாணி அளவு குறைவாக உட்கொள்ளலாம். அளவாக உண்ணும் முறை முக்கியம். ஆகவே, பிரியாணி அளவுக்கு மீறக்கூடாது.

பலாப்பழத்திற்கு என்று ஒரு தனிப்பட்ட தன்மை அதன் சத்தான சுளைகளில் உள்ளது. அதன் பயன்பாடு பிரியாணி செய்வதற்கு உற்ற துணையாகும். காய் நிலையிலேயே இருக்கும் பலாச்சுளையானது, கோழி இறைச்சியின் தன்மையுடன் இருப்பதால் இறைச்சிக்கு மாற்றாக அதைப் பயன்படுத்தலாம். அதிக அளவு கார்போ, புரதம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் சத்து உள்ளது என்று ஆர். ஜகன்மோகன், மோகன்நாயக் என்ற ஆராய்ச்சியாளர்கள் 2018ஆம் ஆண்டு கூறியுள்ளனர்.

பலாக்காய் மாவு சத்து மற்றும் நாற்சத்து நிறைந்த ஒரு முக்கியமான உணவாகும். மேலும் இதில் உள்ள Iso – Flavones நோய் எதிர்ப்பு வகை மற்றும் photo nutrients புற்றுநோயை எதிர்கொண்டு வெல்லும் திறன் கொண்டது என்பதாகும். மேலும் வயிறு அல்சர் மற்றும் அஜீர்ண கோளாறுகளில் இருந்து காக்கும் தன்மை கொண்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பலாக்கொட்டைகளைகூட நாம் சுவை மிகுந்த பொரியல் செய்து பிரியாணியுடன் உண்ணலாம்.


Share the Article

Read in : English