Read in : English

Share the Article

தமிழக கடற்பகுதியில் மிதக்கும் புதிய வகை உயிரினம் ஒன்று கரை ஒதுங்க துவங்கியுள்ளது. இது, சுழல் மாசுபாடு மற்றும் கடல் பகுதியில் ஏற்படும் மாற்றத்தால் ஏற்படுகிறதா என, கடல் வாழ் உயிரினம் பற்றி ஆய்வு நடத்தும் அறிஞர்கள் தீவிரமாக கவனித்து வருகின்றனர்.
தமிழகக் கடற்கரை, இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் ஆகியவற்றை  சார்ந்து, 1,076 கிலோ மீட்டர் நீளமுள்ளது. இந்தியாவில், குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக நீண்டது. இலங்கை, பாக் நீரிணை, மன்னார் வளைகுடா போன்ற நீர்ப்பரப்புகளால் சூழ்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு துவங்கி, கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசம் வரை நீண்டுள்ளது. இதை சார்ந்து பல லட்சம் மீனவர்கள் வாழ்கின்றனர். பெரிய, நடுத்தர மீன்பிடி துறைமுகங்கள், மீன்பிடித் தொழிலுக்கு உதவியாக பல உள்ளன. பிடிக்கப்படும் மீன்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் விற்கப்படுகிறது. ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

தமிழகத்தின் கிழக்கு பகுதியான வங்காள விரிகுடாவில் ஏற்படும் தட்ப வெப்ப மாற்றம், தமிழகக் கடலோரத்தில் பிரதிபலிக்கிறது. இந்த மாற்றங்களை பாரம்பரிய அறிவால் உணர்ந்து. உள்வாங்கி மீன்பிடித் தொழிலை தகவமைத்துக் கொள்கின்றனர் தமிழக மீனவர்கள்.
கடந்த, 2004 டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமியில், தமிழக கடலோரத்தில் பல்லாயிரம் பேர் உயிரிழந்தனர். அந்த பேரழிவில் வாழ்க்கை ஆதாரத்தை இழந்தவர்களை கணக்கிட முடியாது.

சுனாமி பேரழிவுக்கு பின், தமிழக கடற்கரையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தற்போது, புதிய வகை உரியினம் ஒன்று, கடலோரப் பகுதியில் ஒதுங்கத் துவங்கியுள்ளது.

சுனாமி பேரழிவுக்கு பின், தமிழக கடற்கரையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தற்போது, புதிய வகை உரியினம் ஒன்று, கடலோரப் பகுதியில் ஒதுங்கத் துவங்கியுள்ளது. கவர்ச்சியான தோற்றத்தில், மயில் தோகை வண்ணத்தில் நேர்த்தியான கோலம் போல் காட்சியளிக்கிறது. வட்ட வடிவில், ஜெல்லிமீன் போல் உள்ளது. மினுமினுப்புடன் கவர்ந்திழுக்கிறது. நேர்த்தியாக வார்த்த வட்டவடிவ நாணயம் போலவும், அதைச் சுற்றி மயிர்கள் அடர்ந்துள்ளது போலவும் காட்சி அளிக்கிறது.

இதன் பெயர், ப்ளு பட்டன். தமிழில் இதற்கு பாரம்பரியமாக பெயர் எதுவும் இல்லை. அட்லாண்டிக் கடலில் அதிகம் காணப்பட்ட இந்த விலங்கினம், தமிழக கடற்கரையில், கஜா புயலுக்கு பின், தென்படத் துவங்கியுள்ளதாக, மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். சென்னை கடற்கரையில், கடந்த, 2019 ஜனவரி மாதத்தில் இது போன்ற உயிரினம் கரை ஒதுங்கியதாக, கடல் உரியின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

தற்போது, மாமல்லபுரம் பகுதியில் அதிகம் கரை ஒதுங்குகிறது. செங்கல்பட்டு மாவட்டம், பட்டிப்புலம் கிராம கடற்கரையில் ஞாயிறன்று, பல நுாறு ப்ளு பட்டன் உயிரினங்கள், பல்வேறு அளவுகளில் கரை ஒதுங்கியபடி இருந்தன. இது, கடற்கரைக்கு வந்தவர்களை கவர்ந்தது. கடந்த சில நாட்களாக கடற்கரையில் தென்படுவதாக பட்டிப்புலம் பகுதி மீனர்கள் தெரிவித்தனர்.

கவர்ச்சியான தோற்றமுள்ள இந்த உயிரினம், தமிழக கடற்பகுதியில் சில ஆண்டுகளாகத்தான் ஒதுங்கி வருகிறது. இதன் விலங்கியல் பெயர், ‘போர்பிடா போர்பிடாஎன்பதாகும். பொதுவாக, ப்ளூ பட்டன் என அழைப்பர்.

சென்னை பள்ளிக்கரணை கடல் வாழ் உயிரின ஆய்வு நிறுவன ஆய்வறிஞர் ஒருவர் கூறியதாவது; கவர்ச்சியான தோற்றமுள்ள இந்த உயிரினம், தமிழக கடற்பகுதியில் சில ஆண்டுகளாகத்தான் ஒதுங்கி வருகிறது. இதன் விலங்கியல் பெயர், ‘போர்பிடா போர்பிடா’ என்பதாகும். பொதுவாக, ப்ளூ பட்டன் என அழைப்பர். ஜெல்லி மீன் போல் இருக்கும். ஆனால், அந்த வகையைச் சேர்ந்தது அல்ல. அட்லாண்டிக், பசிபிக், இந்திய பெருங்கடல் பகுதியில்தான் அதிகம் காணப்படும். பொதுவாக, பழுப்பு மற்றும் அடர் நீல வண்ணங்களுடன் இருக்கும்.

வங்காள விரிகுடா பகுதியில் சில ஆண்டுகளாக தென்பட துவங்கியுள்ளது. கடல் நீரில் மிதந்தபடி வாழும். வினோத பழக்கத்தை கையாண்டு உணவை பிடித்து உயிர் வாழும்.  இதன் வண்ணமும், வடிவமும் ஈர்க்கும் தன்மையும் வினோதமானது. அலையில் மிதந்து கடற்கரையில் ஒதுங்கும் இந்த உயிரினத்தை தொடக்கூடாது. இது மனித உடலில் பட்டால், பட்ட இடங்களில் அரிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, எச்சரிக்கையுடன் விலகி நிற்பதே நல்லது.

இது அபாயகரமான உயிரினம் அல்ல. தமிழகத்தில், வங்கக் கடற்கரையில் ஒதுங்கி வருவதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். இது, கடல் சுழல்மாசு மற்றும் மாற்றத்தால் ஏற்படுகிறதா என்பதை ஆய்வுக்கு பின் தான் சொல்ல முடியும், இவ்வாறு, ஆய்வறிஞர் கூறினார். கடற்கரையில் ஒதுங்கும் இது போன்ற உயிரினங்களை எச்சரிக்கையுடன் அணுகுவதே பாதுகாப்பானது


Share the Article

Read in : English