English தமிழ்

Share the Article

காவி உடை அணிந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாரணாசிப் படித்துறையில் இறங்கி கங்கையில் ஒரு முழுக்குப் போட்டார், தண்ணீருக்கு மேலே ஒரு ‘கலசத்தை’ மட்டுமே வைத்துக்கொண்டு. அந்தக் காட்சி, சென்னையின் கவனம் இழந்த தனது நதிகளின் மீது திரும்பியிருக்கிறது.

‘’நமாமி கங்கா’ என்ற பெயரில் தீட்டிய கங்கை மறுவாழ்வுத் திட்டத்திற்கும், முன்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ‘சுத்தமான கங்கைப் பணி’ திட்டத்திற்கும் நிறைய பணம் செலவழிக்கப்பட்டது என்றாலும், நதி நீரில் முழுக்க மூழ்குவது என்பது ஒரு தைரியமான முயற்சிதான். ஏனென்றால் நதியின் பல இடங்கள் கடுமையாக மாசுப்பட்டிருக்கிறது என்று பல அறிக்கைகள் சொல்கின்றன. சில இடங்களைப் பற்றி தைரியமூட்டும் சில சோதனைத் தரவுகள்தான் கவனத்தைக் கவர்ந்த மோடி தண்ணீரில் முழுக்குப் போட்டதற்குப் பாதிகாரணம்.

2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான கங்கை நதியின் நீர்த்தரம் பற்றிய அறிக்கை ஒன்றை மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. மதிப்பீட்டுக்கான முக்கியமான அளவீடு பற்றி அது சொல்வது இதுதான்: வாரணாசியில் உள்ள மேல்நீரோடைப் பகுதியில் இருக்கும் நீரில் கலந்திருக்கும் ‘கோலிஃபார்ம்’ நுண்ணுயிரிகள் (வழக்கமாக வீட்டுக் கழிவிலிருந்து வருபவை) எண்ணிக்கை 800 எம்பிஎன் (மோஸ்ட் பிராபபிள் நம்பர்)/100 எம்எல் (மில்லி லிட்டர்). மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்றுக்கொண்ட அதிகப்பட்ச அளவீடு 2,5000 எம்பிஎன். வாஸ்தவத்தில் மால்வியா பாலம் என்ற கீழ்நீரோடைப் பகுதியில் அதே நதியில் மலம் சார்ந்த ‘கோலிஃபார்ம்’ எண்ணிக்கை 11,000/எம்பிஎன்.

‘சுத்தமான கங்கைப் பணி’ திட்டத்திற்கும் நிறைய பணம் செலவழிக்கப்பட்டது என்றாலும், நதி நீரில் முழுக்க மூழ்குவது என்பது ஒரு தைரியமான முயற்சிதான். ஏனென்றால் நதியின் பல இடங்கள் கடுமையாக மாசுப்பட்டிருக்கிறது என்று பல அறிக்கைகள் சொல்கின்றன

வாரணாசியிலிருந்து ஒளிபரப்பப்பட்ட உணர்ச்சியும், வண்ணமும், மற்றும் பிரதமரின் அசராத கங்கை முழுகலும் இந்தியாவின் ‘மருத்துவ வசதிகளின் தலைநகரம்’ என்றழைக்கப்படும் சென்னையில் வசிப்பவர்களுக்கு அவர்களது கூவம், அடையாறு நதிகளின் துயரம் பற்றிய வருத்தத்தை மீண்டும் கிளறியது. வெள்ளம் வரும்போது மட்டும் இந்த நதிகளின் மட்டம் உயர்கிறது. மற்றபடி அவை பல கிலோமீட்டர் தூரத்திற்குச் சீரழிந்து திறந்தவெளிச் சாக்கடைகளாக இயங்கி தங்கள்மீது வீசப்படும் விஷங்களை முடிவில் கடலில் கொட்டுகின்றன.

நீண்டகாலத் தேடல்

கூவம், அடையாறு நதிகளின் முகத்தை மாற்ற காலந்தோறும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பி.பி. சுந்தரேசன் என்ற சுற்றுப்புறச்சூழல் விஞ்ஞானி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1984இ-ல் பதவியேற்ற சமயம் பெரும்முயற்சி ஒன்றை எடுத்தார். அதன்படி, கெட்டுச் சீரழிந்த கூவம் ஆற்றைச் சுத்தம் செய்து சீர்திருத்த, அவர் ஒவ்வொருவரிடம் ஒரு ரூபாய் என்ற ரீதியில் மக்களிடம் பணம் வசூலித்து ஒரு மையநிதியை உருவாக்கினார். ஆனால் அது பெரிதாகக் கைகூடவில்லை. அதைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2019-இல் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் திட்டத்தைத் தொடங்கிவைக்கும் வகையில் கையில் உறைகள் மாட்டிக்கொண்டு நேப்பியர் பாலத்தருகே குப்பைகளை வாரி சுத்தம் செய்தார்.
ஆயினும், சலித்துப்போன சென்னைவாசிகளுக்கும், மாநகரத்திற்கு லட்சக்கணக்கில் வருகை தருபவர்களுக்கும் தெரியும், அவ்வப்போது எடுக்கும் துரிதநடவடிக்கையும், பொதுநல வழக்குகளும் மாநகரத்து நதிகளின் பிம்பத்தை அல்லது (கெட்ட) சுகாதாரத்தை மாற்ற முடியாது என்று.

நிஜத்தில், 2019-லிருந்து கூவம், அடையாறு நதிகளைத் தூய்மைப்படுத்த தமிழக அரசு என்ன செய்திருக்கிறது என்பது பற்றிய காலாண்டு அறிக்கைகளை அது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. பல தசாப்தங்களாக சுயாதீன விஞ்ஞானிகள் சென்னை நதிகளின் நீர்த்தரம் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். நதிகளின் மாசு பற்றிய அவர்களின் கண்டுபிடிப்புகள் அதிர்ச்சி தருபவை. ஆர்செனிக் என்ற பாஷாண வேதியல் தனிமம், ஈயம், பாதரசம் போன்ற உலோகங்கள், மாசை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் ஆகியவை நதிகளில் கலந்துவிட்டன. கட்டுமானப் பகுதிகள் வழியாக கணிசமான தூரம் பயணிக்கும் கூவத்தின் பல்வேறு இடங்களில் நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் நிறையவே இருக்கின்றன. அடையாற்றின் வழியிலான பகுதிகளில் நிலத்தடி நீரைப் பற்றிய பெருங்கவலை ஓங்கியிருக்கிறது.

சுற்றுப்புறச் சூழலின் மீதும், பருவநிலை மாற்றத்தின் மீதும் கவனத்தைக் குவித்துக் கொண்டு பசுமைப் பாதையில் நடைபோட ஆரம்பித்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், அரசு அமைப்புகளுக்குப் பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்க முடியும்

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மாநில அரசின் அறிக்கைகள் அரசின் பெரிய வைராக்கியத்தைப் பற்றிப் பேசுகிறது. தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வராக இருந்த 2009-ஆம் ஆண்டில், திமுக அரசு சார்பில் ஒரு வாக்குறுதியைத் தந்தார்; பத்தாண்டிற்குள் கூவத்தை முற்றிலும் மீட்டெடுப்போம் என்று. ஆனால் தேங்கிக் கிடக்கும் நதியைப் போலவே இந்த விஷயம் தேங்கியே கிடக்கிறது.

கூவத்தைத் தவழ விடுதல்

பொதுப்பணித்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், நகரப் பேரூராட்சிகள் இயக்ககம் ஆகியவை செய்த பணிகளுக்குப் பின்பு, 2021ஆம் வெள்ளத்தில் ஒன்றிணைக்கப்பட்ட கூவம் நதி சுற்றுச்சூழல் மீட்டெடுப்புத் திட்டம் எப்படி செயற்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிய விளக்கமான அறிக்கை இன்னும் வெளிவரவில்லை. இதற்கிடையில் சென்னை நதி மீட்பு அறக்கட்டளை துறைகளுக்கிடையிலான திட்டங்களில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுகிறது.

மாசடைந்த கூவம் நதி

மாசடைந்த கூவம் நதி

பொதுப்பணித்துறை தூர்வாரியிருக்கிறது; நீர்ப்போக்கிற்காக சிறு கால்வாய் கட்டியிருக்கிறது; பெருநகர சென்னை மாநகராட்சி மாநகரத்தின் குப்பைகளை, கட்டுமான இடிப்புக் குப்பைகளை நதிகளிலிருந்து அகற்றியிருக்கிறது; நீர்ப்போக்கைத் தடுக்கும் புதிய, திடக்கழிவைக் கட்டுப்படுத்த எட்டு பெரிய குப்பைத் தொட்டிகளை வைத்திருக்கிறது; வேலியிட்டிருக்கிறது; திருவேற்காடு நகராட்சியில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை பேரூராட்சி இயக்ககம் அகற்றியிருக்கிறது. இவையெல்லாம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் தமிழக அரசு சொன்னவை. இந்த நடவடிக்கைகள் எவ்வளவு பலனளித்திருக்கின்றன என்பதைத் தீர்மானிக்க இவற்றைக் கணக்காய்வு செய்ய வேண்டும்.

கூவத்தின் தொடரழிவை நிறுத்த 33 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கலவையான முன்னேற்றத்தைச் சந்தித்திருக்கின்றன. சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், மதுரவாயல் ஆகிய இடங்களின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் எப்போது இயங்க ஆரம்பிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. லாங்ஸ் கார்டனில் அமைக்கவிருக்கும் ஆகப்பெரிய சுத்திகரிப்பு நிலையம் 2022-இல்தான் சாத்தியமாகும் என்று தெரிகிறது.

கூவம், அடையாறு, அவற்றோடு சம்பந்தப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன் கால்வாய் – போன்றவையும், இன்னபிற சதுப்புநிலங்களும், சிறிய நகரக்கால்வாய்களும், சமீபத்திய வெள்ளத்தில் இந்த மாநகரத்திற்கு மிகப்பிரமாதமாக சேவை செய்திருக்க வேண்டும். இவற்றின் நிலையற்ற தன்மை மீண்டும் பெரியதோர் கேள்வியை எழுப்புகிறது.

(கிரேக்க மகாகவி ஹோமரைப் பற்றி காலங்காலமாக கேட்கப்பட்டு, ஆராயப்பட்டு, இறுதிவிடை எதையும் அடையாத கேள்விக்குச் சரித்திரத்தில் ‘ஹோமர் கேள்வி’ என்று பெயர்).
இந்தக் கேள்வி அதைப் போன்றதுதான். கேள்வி இதுதான்: சென்னை நதிகளைச் சுத்தம் செய்யும் கருத்து ஒரு சிசிஃபியன் போராட்டமா?

(கிரேக்கப் புராணத்தில் மலைமீது கல்லை உருட்டி அது உருண்டோடி திரும்பி வரும்போது அதை மீண்டும் மலையுச்சிக்கு ஏற்றும் விவேகமற்றவனின் பெயர் ‘சிசிபஸ்’. அதனால் பிரயோஜனமற்ற முயற்சி ‘சிசிஃபியன் முயற்சி’ என்று அழைக்கப்படுகிறது).
வாஸ்தவம்தான். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பருவநிலை மாற்றத்திற்குத் தகுந்தவாறு அனுசரித்துப் போதல் என்ற பெரிய சுற்றுப்புறச்சூழல் சவாலை எதிர்கொண்டிருக்கிறது. மேலும், அது வறட்சி அல்லது வெள்ளம் என்று மாறிமாறி தயார்நிலையில் இருக்க வேண்டியிருக்கிறது. மாநகரங்களைப் பசுமைப்படுத்தல், விவசாயத்தை மேம்படுத்தல், நீர் உத்தரவாதத்தோடு தொடர்ந்து இயங்கக்கூடிய நகரக் குடியிருப்புகளைத் திட்டமிடுதல் என்று அவரது அரசிற்குச் சவால்கள் நிறையவே இருக்கின்றன. மாநகர நதிகளைச் சுத்தம் செய்தல் என்பது இந்த லட்சியங்களுக்குச் சம்பந்தமில்லாதது அல்ல. உண்மையில் அது பரந்த வானிலை லட்சியங்களோடு தொடர்புடையது.

சுற்றுப்புறச் சூழலின் மீதும், பருவநிலை மாற்றத்தின் மீதும் கவனத்தைக் குவித்துக் கொண்டு பசுமைப் பாதையில் நடைபோட ஆரம்பித்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், அரசு அமைப்புகளுக்குப் பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்க முடியும். அவற்றில் ஒன்று, கால்வாய்களையும், அணைகளின் கொள்ளளவுத் திறன்களையும் மேம்படுத்திக் கூவம், அடையாறு நதிகளில் சுற்றுப்புறச் சூழலைப் பேணிக்காக்கும் பணி. மாநகரத்தில் நியாயமான வாடகை வீடு என்ற விஷயத்தில் நகர முன்னேற்றம் புத்தியை இழந்துவிட்டது. அதன் விளைவாக நதிக்கரை ஆக்ரமிப்புகள் உருவாகின. மேலும் புறநகர்களில் சரியான கழிவுநீர் இயந்திரங்கள் அமைக்கப்படவில்லை. மொத்தத்தில் இவையெல்லாம்தான் நதிகளைச் சீரழித்துவிட்டன. சென்னை உட்பட மாநகரங்களும், நகரங்களும் திடக்கழிவு மேலாண்மையை, நெகிழிப் பிரச்சினையை கையாளத் தவறிவிட்டன. பொதுவான மாசுப் பிரச்சினையில் ஆகத்தாழ்வானதோர் தரத்தை விதித்திருக்கின்றன.

பத்தாண்டுக்கு முன்பு, ஸ்டாலின் சிங்கப்பூர் சென்று அங்கே நதித் தூய்மைத் திட்டத்தை நேரில் பார்த்தார். சென்னையின் நதிகளுக்குள் கலக்கும் மாசுப்பொருட்களைத் தடுக்கும் வகையில் தகுந்த அரசுக் கொள்கைளை உருவாக்கி செயல்படுத்த வேண்டியது அவசியம்


Share the Article