Read in : English

Share the Article

C N அண்ணாதுரை தன் திராவிட கழக நண்பர்களுடன் ஒரு மழைக்கால செப்டம்பர் நாளில் 1949ம் ஆண்டு தொடங்கிய திராவிட முன்னேற்ற கழகம் இப்பொழுது அடைந்திருக்கும் வளர்ச்சி நினைத்து பார்க்க முடியாத ஒன்று. திமுக தொடங்கப்பட்ட காலங்களில் அது தன்னைவிட பெரிய தேசிய கட்சியான காங்கிரசுடன் போராட வேண்டியிருந்தது. ஓரளவு வளர்ந்தவுடன் திமுகவிலிருந்து பிரிந்து சென்ற எம்ஜியார் ஆரம்பித்த அதிமுகவுடன் போட்டிபோட வேண்டியிருந்தது. எம்ஜியார் ஜெயலலிதா போன்ற கவர்ச்சிகரமான தலைவர்கள் இல்லை. எதையும் யோசிக்காமல் இரட்டை இலையில் வாக்களிக்கும் அதிமுகவின் தொண்டர் பலத்துடன் நோக்கும்போது திமுகவின் சக்தி குறைவு. மத்திய அரசுகளின் ஆதரவும் சொல்லிக்கொள்ளும் அளவு இருக்காது. ஆனால் ஆளும் கட்சியாகவோ எதிர்கட்சியாகவோ திமுக எப்படி எப்பொழுதும் களத்தில் இருக்கிறது?
 

திமுகவின் பலம் அதன் திராவிட கொள்கை. அதை சாதாரண மக்களுக்கு கொண்டு சேர்ப்பதன் மூலம்தான் தொண்டர்களை உருவாக்க முடியும் அவர்களை தக்கவைக்க முடியும். அதற்காக திமுக ஊடகங்களை பயன்படுத்துகிறது.

 
திமுகவின் பலம் அதன் திராவிட கொள்கை. அதை சாதாரண மக்களுக்கு கொண்டு சேர்ப்பதன் மூலம்தான் தொண்டர்களை உருவாக்க முடியும் அவர்களை தக்கவைக்க முடியும். அதற்காக திமுக ஊடகங்களை பயன்படுத்துகிறது. சொல்லப்போனால் திமுக ஊடகங்களை பயன்படுத்தும் அளவுக்கு வேறெந்த கட்சியும் செய்வதில்லை என்றே கூறலாம். பொதுக்கூட்டங்கள், நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் தொடங்கி இப்போதுள்ள சமூக ஊடகங்கள் வரை திமுக எப்போதுமே முன்னணியில் இருக்கிறது.
 
தமிழ் சினிமா வரலாற்றை விரிவாக ஆராய்ச்சி செய்திருக்கும் எழுத்தாளர் வாமனன் ஒரு ருசிகரமான சம்பவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். ஒரு சமயம் AV மெய்யப்ப செட்டியார் திரையரங்குகளுக்கு வரும் கூட்டம் ஏன் குறைகிறது என்று யோசிக்க தொடங்கினார். இது நடந்தது 1950 களில், விசாரித்தபோது திரையரங்குகளுக்கு வருவதை விட மக்கள் நாடகங்களை விரும்புவதை கவனித்தார். விசாரித்த பொழுது அண்ணாதுரையும் அவரது குழுவினரும் இதுபோன்ற சமூக நாடகங்களை நடத்துவதை அறிந்தார். சில ஆண்டுகள் முன்பு சுதந்திரம் அடைந்த இந்தியாவுக்கு பல சிக்கல்கள் இருந்தன. சமூக பொருளாதார இன்னல்கள் இருந்தன. ஆனால் திரைப்படங்களில் அவை பிரதிபலிக்கவில்லை. சமூக பிரச்சினைகளை பேசும் படங்கள் தான் இனி எடுபடும் என்று அவருக்கு தெரிந்தது. இவ்வாறுதான் மெய்யப்ப செட்டியார் ஸ்டுடியோவில் கருணாநிதி திரைவசனம் எழுதிய திமுக கொள்கைகளை பேசும் பராசக்தி படம் எடுக்கப்பட்டது, என்கிறார் வாமனன்.
 
ஊடகங்களின் பலத்தை கருணாநிதி அளவுக்கு அறிந்தவர்களும் உபயோகித்தவர்களும் இல்லை என்று சொல்லலாம். பதினான்கு வயதில் மாணவ நேசன் என்ற கையெழுத்து பத்திரிக்கை ஆரம்பித்தவர் அவர். உடல்நிலை நலியும் வரை உடன்பிறப்புகளுக்காக முரசொலியில் எழுதியவர். வெகுஜன தினசரி தேவை என்ற போது தினகரன், தமிழ் முரசு. 1990களில் ஸ்டார் தனியார் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாறன் சகோதரர்கள் சன் தொலைக்காட்சியை ஆரம்பித்தார்கள். “வீடியோ டெக் கொண்டு மக்கள் படம் பார்த்துக்கொண்டிருந்த போது அவர்கள் பூமாலை என்ற வீடியோ இதழை நடத்திவந்தார்கள். அதற்கடுத்து சன் தொலைக்காட்சி தொடங்கினார்கள். வெள்ளிக்கிழமை ஒலிஒளியும் மட்டும் தூர்தர்சன் ஒளிபரப்பிய நேரமது. சன் தொலைக்காட்சி தொடங்கியவுடன் பிரமாண்ட வெற்றியடைந்தது. கிராமங்களில் இன்று கூட சன் கனெக்ஷன் என்று கேபிள் டிவி தொடர்பை கேட்பவர்கள் இருக்கிறார்கள்,” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் அவர்கள்.
 
திமுகவை பின்பற்றி எல்லா கழகங்களும் தங்களுக்கென்று பத்திரிக்கை, தொலைக்காட்சி என்று ஊடகங்களை தொடங்கியதும் தமிழகத்தில் நடந்தது.
 

சமூக ஊடகங்கள் தொடங்கிய காலங்களிலேயே கருணாநிதி அவற்றை சோதிக்க ஆரம்பித்து விட்டார். அவர் ட்விட்டர் உபயோகிக்க ஆரம்பித்த போது ராகுல் காந்தி ட்விட்டரில் இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 120 வார்த்தை வரைமுறை கொண்ட ட்விட்டரில் நறுக்கென்று ஒரு வரியில் பதிவிடுவார். ஏறக்குறைய நான்கு இலட்சம் பேருக்கு மேல் ட்விட்டரில் அவரை பின்தொடர்ந்தார்கள்.

 
சமூக ஊடகங்கள் தொடங்கிய காலங்களிலேயே கருணாநிதி அவற்றை சோதிக்க ஆரம்பித்து விட்டார். அவர் ட்விட்டர் உபயோகிக்க ஆரம்பித்த போது ராகுல் காந்தி ட்விட்டரில் இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 120 வார்த்தை வரைமுறை கொண்ட ட்விட்டரில் நறுக்கென்று ஒரு வரியில் பதிவிடுவார். ஏறக்குறைய நான்கு இலட்சம் பேருக்கு மேல் ட்விட்டரில் அவரை பின்தொடர்ந்தார்கள். மிகவும் நோய்வாய்ப்படும்வரை பதிவிட்டு வந்தார் அவர். “எந்த புதிய ஊடகங்கள் வந்தாலும் ஆர்வமுடன் சோதித்து பார்க்கும் குணம் அவருக்கு உண்டு. அதற்க்கென்று ஒரு கலைத்தாகம் வேண்டும்,” என்கிறார் திராவிட கட்சிகளின் வரலாற்றை பதிவு செய்த சங்கொலி திருநாவுக்கரசு அவர்கள். அவரது தொண்டர்களும் அது போன்றே இருந்தார்கள். இருவரியில் முழக்கங்கள் எழுதுவது சுவரொட்டியில் தங்களுடைய படைப்பை வைப்பது எல்லாம் திமுக தொண்டர்கள் வழக்கமாக செய்யும் காரியங்கள், என்கிறார் திருநாவுக்கரசு அவர்கள்.
 
இன்றைய நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அடுத்து இணையதள பலம் உள்ளது திமுக மட்டுமே. நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் தலைமையில் செயல்படும் திமுக இணையதள அணி மிகுந்த வலுவானது. பாஜக பதிவிடும் எதற்கும் அதனால் எதிர்வினை ஆற்ற முடியும். பாஜக போன்று இணையத்தில் திமுகவென்று மிகமிக நம்பிக்கையான ஒரு பட்டாளம் இருக்கிறது. மோடி தமிழகம் வரும்போது ட்விட்டர் எப்படி செயல்படுகிறது என்பதை ஆராய்ந்தாலே அது தெரிந்துவிடும்.
 
ஆங்கில நாளிதழ் பிசினஸ் ஸ்டாண்டர்ட் 2019ம் ஆண்டு மே மாதம் ஒரு கட்டுரை வெளியிட்டது. தேர்தல் காலமான அந்த வருடம் பிப்ரவரி முதல் மே வரையான கூகிள் விளம்பரங்களுக்கு அதிகம் செலவு செய்த கட்சிகள் எவை என்பதை பற்றிய கட்டுரை அது. ரூபாய் 17 கோடி செலவு செய்து முதலிடத்தில் இருந்தது பாஜக. அடுத்த இடத்தில் இருந்தது தேசிய கட்சியான காங்கிரஸ் இல்லை. ரூபாய் 4 கோடிக்கு மேல் செலவு செய்து இரண்டாமிடத்தில் இருந்தது திமுக. ரூபாய் இரண்டு கோடிதான் காங்கிரஸ் செலவிட்டிருந்தது. காங்கிரஸோடு ஒப்பிடுகையில் திமுக ஒரு பிராந்திய கட்சி ஆனால் அது இணையத்துக்கு கொடுக்கும் மதிப்பு அதிகம்.
 
சமூக ஊடகங்களையும் தாண்டி திமுக வேறு ஒரு முயற்சியில் இப்போது இறங்கியுள்ளது. ஆங்கிலத்தில் Dravidian Professionals Forum (திராவிட வல்லுநர்கள் மன்றம்) என்றழைக்கப்படும் இந்த அமைப்பு 2020 வருடம் தொடங்கப்பட்டது. கடினமான தொழிற்நுட்ப விவாதங்கள் இந்த மன்றத்தில் நடக்கின்றன. அறிவியல் பொருளியல் அறிஞர்கள் உலகநாடுகளின் தலைவர்கள் இந்த விவாதங்களில் கலந்து கொள்கிறார்கள். இதற்காக zoom போன்ற செயலிகளை இந்த அமைப்பு பயன்படுத்துகிறது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் திமுக கொள்கைகளை கொண்டுசேர்க்கும் ஒரு அமைப்பென்று இதை சொல்லலாம்.
 
சிலநாட்கள் முன்பு முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜா அவர்கள் கலந்துகொண்ட முகநூல் விவாதம் ஒன்று இந்த அமைப்பு நடத்தியது. ஏறக்குறைய நாலாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். இருநூற்றைம்பது பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். “திமுகவிற்கு தமிழை பொறுத்தவரை தேவையான பிரச்சார இலக்கிய வளம் இருக்கிறது. ஆங்கிலம் பேசும் இணையத்தை முழு மூச்சாக உபயோகிக்கும் தமிழ் மக்களை சென்றடைய நமக்கு ஆங்கிலத்திலும் இது போன்ற ஒரு வளம் தேவை என்று உணர்ந்ததால் தோன்றியது இந்த புது முயற்சி,” என்கிறார் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புகழ் காந்தி.

Share the Article

Read in : English