Read in : English

Share the Article

சமூக ஒற்றுமையின் காரணமாக சமூகங்களுக்கிடையில் ஒரு பொதுவான பண்பாட்டு நெறி உருவாகும்போது மொழிகள் பரிணாம வளர்ச்சி அடைந்து பரவுகின்றன. இது எல்லா மொழிகளுக்கும் ஏன் தமிழுக்கும் பொருந்தும். காலப்போக்கில் மொழிகளின் உருவாக்கம் மற்றும் பரவலுக்கு எந்த ஒரு நபரோ அல்லது சமூகமோ உரிமை கோர முடியாது.

ஒருவருக்கு மொழியின் மீது அதீத நாட்டம் இருக்கலாம். ஆனால், மொழி வெறி இருப்பது ஆரோக்கியமானதல்ல. இது மக்களிடம் பிற மொழிகளின் மீதான நன்மதிப்பை குறைத்துவிடும்.

மொழிகளில் நல்லது, கெட்டது என்பது இல்லை. ஒவ்வொரு மொழியும் தனித்துவம் வாய்ந்தது. மக்கள் தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து கற்றும் பயன்படுத்தியும் வருகிறார்கள்

மொழிகளில் நல்லது, கெட்டது என்பது இல்லை. ஒவ்வொரு மொழியும் தனித்துவம் வாய்ந்தது. மக்கள் தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து கற்றும் பயன்படுத்தியும் வருகிறார்கள்.

சுதந்திர போராட்ட இயக்க காலத்தில் இந்தியாவில் தலைவர்கள் பல மொழிகளை பேசியும், எழுதியும் வந்தார்கள். ஆனால், இன்றைய சூழலில் தாய் மொழியைத் தவிர ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழியைக் கற்பது ஏற்றதாக இல்லை.

ஒரு குறிப்பி்ட்ட மொழியை, மற்றதைக் காட்டிலும் இதுதான் சிறந்தது என்று குறுகிய எண்ணத்தில் சில கொச்சையான பொது விவாதங்களும், பிரசாரங்களும் தமிழகத்தில் பல தசாப்தங்களாக நடந்து வருகின்றன. இது மேம்பட்டு வரும் அந்த மொழியின் மரபு மற்றும் நெறிமுறைகளுக்கு எதிரானது. தமிழுக்கும் இந்திக்கும் அல்லது தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடையிலான சர்ச்சை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கும், அதன் கொள்கைகளுக்கும் அநீதி இழைப்பதாகும்.

ஒவ்வொரு குடிமகனும் நாடு முழுவதும் தங்குதடையின்றி தனக்கு விருப்பமான மொழியை கற்க அரசியலமைப்புச் சட்டம் சமவாய்ப்புகளை வழங்கியுள்ளது. எனினும் பிராந்திய அரசியலின் தன்மை ஒரு மொழியை கேலி செய்யும் வகையில் உள்ளது. வாக்கு வங்கிகளும், ஊடகங்களும் பொதுமக்களின் கருத்துக்களை தூண்டிவிடுகின்றன. ஆனால், இந்திய சமூகம் பன்மொழி மற்றும் பன்முக கலாசாரம் கொண்டது என்பதை அரசியல் அமைப்புகள் மறந்துவிடுகின்றன அல்லது புறக்கணித்துவிடுகின்றன.

அண்மையில் திருப்பதியில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழி குறித்து தெரிவித்த கருத்து இதற்கு சிறந்த உதாராணம். இந்தக் கூட்டத்தில் தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன் நோக்கம் பிராந்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான அடிப்படை பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான். பல முக்கியமான பிரச்னைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு (51 பிரச்னைகளில் 40-க்கு) தீர்வுகாணப்பட்டன. ஆனால், துரதிருஷ்டவசமாக செய்தி ஊடகங்கள், அவற்றை விட்டுவிட்டு, சர்ச்சைகளை ஏற்படுத்தும் செய்திகளைத் தருவதிலேயே அதிக ஆர்வம் காட்டின.

நம்மைப் போன்ற பன்மொழி மற்றும் பன்முக கலாசார சமூகத்தில் மொழி பற்றிய நிலைப்பாடுகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. இதை ஊடகங்கள் தங்களுக்குச் சாதமாக பயன்படுத்திக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றன. ஒரு காலத்தில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் இந்திய செய்தி ஊடகங்கள் முக்கியப் பங்கு வகித்தன. ஆனால், சமீபகாலங்களாக ஊடகங்களின் உண்மையான நோக்கம் முடக்கப்பட்டுள்ளது.

நம்மைப் போன்ற பன்மொழி மற்றும் பன்முக கலாசார சமூகத்தில் மொழி பற்றிய நிலைப்பாடுகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. இதை ஊடகங்கள் தங்களுக்குச் சாதமாக பயன்படுத்திக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றன. ஒரு காலத்தில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் இந்திய செய்தி ஊடகங்கள் முக்கியப் பங்கு வகித்தன. ஆனால், சமீபகாலங்களாக ஊடகங்களின் உண்மையான நோக்கம் முடக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற 29-வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் அனைத்து தென் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கலந்துகொண்டன. இந்திய அரசியலைமைப்புச் சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்தின்படி மத்திய-மாநில அரசுகளிடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் வலுவான உறவு இருப்பது இன்றைய சூழலில் அவசியமானதாகும். மாநிலங்களின் மறுசீரமைப்புச் சட்டம் 1956, பிரிவு 15-22 இன் கீழ் 1957 ஆண்டு ஐந்து மண்டல கவுன்சில்கள் ஏற்படுத்தப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சர் இந்த ஐந்து மண்டல கவுன்சில்களின் தலைவராகவும், மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறும் மாநிலத்தின் முதல்வர்கள் (சுழற்சி முறையில்) அதன் துணைத் தலைவராகவும் இருப்பார்கள். ஒவ்வொரு மாநிலத்திலிருந்து இரண்டு அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளுநரால் உறுப்பினராகப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

மண்டல கவுன்சில்கள், மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் மற்றும் மண்டலத்தில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான மோதல்கள், சர்ச்சைகளைத் தீர்ப்பதை முதன்மையான நோக்கமாக கொண்டவை. எல்லைப் பிரச்னை, பாதுகாப்பு, சாலை, போக்குவரத்து, தொழிற்சாலைகள், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள், வனம் மற்றும் சுற்றுச்சூழல், வீட்டுவசதி, கல்வி, உணவு பாதுகாப்பு, சுற்றுலா என அனைத்து விஷயங்களும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்.

இதில் பங்கேற்கும் தலைவர்கள் தங்கள் பிராந்திய மொழிகளில் பேசலாம் என்றும் அவர்களின் உரைகள் அப்படியே ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர், தமிழகத்தின் சார்பில் பிரதிநிதியாக பங்கேற்றார். இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் பயன்படுத்தப்படும் மீன்பிடி படகுகளின் அளவு மற்றும் திறன், மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக ரயில்வே நிலங்களை மாற்றுவது உள்ளிட்ட பிரச்னைகளை அவர் எழுப்பினார்.
மேலும் தமிழை நாட்டில் அலுவல் மொழியாக்க வேண்டும் என்றும் திருக்குளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் வலியுறுத்தியதாகவும் அமைச்சர் கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுடனான நதி நீர்ப் பங்கீடு பிரச்னைக்குத் தீர்வுகாண மாநில அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

இந்தி மொழி குறித்த உள்துறை அமைச்சரின் கருத்துகள் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கோ அல்லது பிராந்திய மொழிகளுக்கு எதிரானதாகவோ இருக்கவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ‘இந்தி’ மொழி நண்பன்தான். இந்தியாவின் வளம் இந்திய மொழிகளின் வளர்ச்சியில்தான் உள்ளது. ஒவ்வொருவரும் தங்களது தாய் மொழியில் பேசுவதை பெருமையாக நினைக்கும் சூழ்நிலை உருவாக வேண்டும் என்றார். அவர் பேசியதில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு சிலர் சொந்த விருப்பு வெறுப்புகள் மற்றும் குறுகிய எண்ணத்தால் இதில் தவறு கண்டுபிடிக்கலாம்.

எனினும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இன்று மத்திய உள்துறை அமைச்சகத்தில் எந்த ஒரு கோப்பும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கவில்லை என்பது குறித்து நான் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாங்கள் அலுவல் மொழியாக இந்தியை முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்று அவர் சொல்வதாக எடுத்துக்கொண்டு எந்த காரணமும் இல்லாமல் தமிழ் ஊடகங்கள் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டன. மேற்குறிப்பிட்ட அறிக்கை பிராந்திய மொழிகளுக்கு எதிரானது என்று வாதிடுபவர்கள், 2008-2012 காலகட்டத்தில் அப்போது ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது அனைத்து கோப்புகளும் இந்தியில் எழுதப்படாமல் ஆங்கிலத்தில் இருந்ததை மறந்துவிடுகிறார்கள். அதற்கு காரணம், அவருக்கு ஆங்கிலம்தான் வசதியாக இருந்தது. மேலும் மத்திய அமைச்சகங்களில் நீதிமன்றங்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிக்கை சமர்ப்ிப்பது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக பதிவேடுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் பராமரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அது இல்லையெனில் மொழிபெயர்ப்பு துறையுடன் இணைந்த நிர்வாக கட்டமைப்பும் உள்ளது.

விஞ்ஞானிகள், மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை மூலம் நவீன தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அப்போது வெளிநாட்டு மொழிகள்கூட ஆங்கிலம் அல்லது இந்திய மொழிகளில் நிகழ்நேரத்தில் மொழியாக்கம் செய்யப்படும். தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

(கட்டுரையாளர் ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் பொதுக் கொள்கையில் நிபுணர்.)


Share the Article

Read in : English