English தமிழ்

Share the Article

`வெகு வேகமாக’ ஒரு கோடி மக்கள் தொகையை நெருங்கிக் கொண்டிருப்பதாக அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ள ஒரு நகரத்துக்கு, மழை அளவு 75% அதிகரித்தால், அதுவும் ஐந்தே நாட்களில் இதில் 491% மழை பெய்திருக்கிறது என்றால் அது பேரிடரையே விளைவிக்கும்.

சென்னை மீண்டும் ஒரு வெள்ளப் பேரிடரை எதிர்கொண்டிருக்கிறது. இது ஏராளமான மக்களின் உயிரிழப்புக்கு காரணமான 2015 வெள்ளத்தை மீண்டும் நினைவுபடுத்தகிறது. 2021 அக்டோபர் 1-க்கும் நவம்பர் 13-க்கும் இடையே சென்னை மாவட்டத்தில் 813.9 மி.மீ. மழை பெய்திருக்கிறது. ஆனால் இயல்பான மழை அளவோ 465.5 மி.மீ. தான்.

உணவு வழங்கல் மையத்தில் முதல்வர் ஸ்டாலின். ( Source: MK Stalin’s Twitter page)

ஒரு காலத்தில் சென்னை நகரத்தின் 14 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இருந்தும் பேராதரவைப் பெற்றுவந்த, சென்னை தங்கள் கட்சியின் கோட்டை என அழைத்து வந்த புதிய திமுக அரசு, வெள்ளத்தின் சீற்றத்துக்கு வேகமாக நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. அது துணிச்சலாக வெள்ள பாதிப்புகளை எதிர்த்துப் போராடி வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வெள்ள நீரோடும் வீதிகளில் இறங்கி செயலாற்றி வருகிறது.

சமூக ஊடகங்களில் ஆற்றல் மிக்க பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அக்கறைக்கு விரைவில் வர இருக்கும் மாநகராட்சி தேர்தல் தூண்டுதலாக இருக்கலாம். எனினும் வெள்ளத்தின் வீச்சுக்கு முன்னால் இவை எல்லாம் சாதாரணம் என்றாகிவிட்டது.

நவம்பர் 7- ஆம் தேதியும் 11- ஆம் தேதியும் மழை உச்சத்துக்கு சென்றபோது, பேரிடர் குறித்து பல்வேறு செய்திகள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தன.

அடர்த்தியாக மக்கள் வாழும் பகுதிகளுக்கு பயன்பட்டு வருகிற, ரயில் பாதைகளால் பிரிக்கப்பட்டுள்ள வடக்கே வியாசர்பாடியிலிருந்து மத்திய பகுதிகளில் கெங்கு ரெட்டி, மேட்லி மற்றும் துரைசாமி சுரங்கப் பாதைகள், தெற்கே பழவந்தாங்கல், தாம்பரம் வரையில் உள்ள 11-க்கும் குறையாத வாகன சுரங்கப் பாதைகள் முழுமையாக வெள்ள நீரில் மூழ்கியதால், பல்வேறு காலவரம்பு வரையில் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.

கே.கே. நகர் (ராஜமன்னார் சாலை), மயிலாப்பூர் (சிவசாமி சாலை), செம்பியம், பெரவள்ளூர் 70 அடி சாலை, புளியந்தோப்பு, வியாசர்பாடி, ஈ.வெ.ரா. பெரியார் சாலையின் பகுதிகள் எல்லாம் மக்கள் போக முடியாத பகுதிகள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன. இது ஒரு பகுதி பட்டியல்தான். இவற்றுக்கு இணையாக வேறு பல பகுதிகளும் வெள்ளக்காடாகிவிட்டன. மாம்பலம் பகுதியில் மின்சாரம் இல்லை. கோடம்பாக்கம் முழுவதுமே தண்ணீர்தான்.
பெரும்பகுதி இடங்களில், மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக மின் சப்ளை நிறுத்தப்பட்டது.

பெரும்பகுதி இடங்களில், மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக மின் சப்ளை நிறுத்தப்பட்டது

இது மாநகரத்தையும் அதில் குடியிருக்கும் பல வசதிபடைத்தவர்களையும்கூட முடக்கிவிட்டது.
நன்கு செயல்பட்டு வந்த பொருளாதாரத்தை கோவிட்-19 பெருந்தொற்றானது கீழே கொண்டு சென்றது என்றால், நீண்ட காலமாக நகர வசதிகள் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் பொருளாதாரத்துக்கு இது இரண்டாவது அடி.

தேசிய சராசரியை விட இருமடங்கு என்ற அளவில் ஆண்டுக்கு 8% என்ற வளர்ச்சி விகிதத்தில் 2019-20- இல் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 13,12,929 கோடியாக இருந்தது. வைரஸை தொடர்ந்து வந்துள்ள இந்த வெள்ளத்தால் இது மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகத்தினால் ஊதிப் பெருக்கப்பட்ட, திமுக அரசின் நடவடிக்கைகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு வி.ஐ.பி.க்கள் செல்லுதல், பெருநகர சென்னை மாநகராட்சியின் சிறப்பு சமையல்கூடங்களில் மக்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள உணவின் தரத்தை அறிவதற்காக அதை சுவைத்துப் பார்த்தல், வெள்ள நீரை வடிப்பதற்காகவும், சுரங்கப்பாதைகளை மீண்டும் திறப்பதற்காகவும் செயல்படும் அதிக சக்தி வாய்ந்த பம்புகள் என வழக்கமான காட்சிகளே இடம்பெற்றிருந்தன.

வரும் வாரங்களில் மழை அதிகமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் முன்னதாகவே நீர்த்தேக்கங்களில் இருந்து ஓரளவு தண்ணீர் திறந்துவிட்டதால், கடந்த 2015- இல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வெள்ளம் ஏற்பட்டது போன்ற பிரச்சினைகள் இந்த முறை இல்லை.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பேரழிவை ஏற்படுத்தியது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க, பூண்டி நீர்த் தேக்கத்தில் இருந்து நவம்பர் 13- இல் தேதி, அதன் நீர் வரத்து அளவுக்கு இணையாக வினாடிக்கு 13,264 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

பூண்டியோடு, சோழவரம், ரெட் ஹில்ஸ், செம்பம்ரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளை உள்ளடக்கிய சென்னையின் நீர் அமைப்பில், இந்தத் தேதியில் அதன் முழு கொள்ளளவான 1,854 மில்லியன் கனஅடியை விட இன்னும் தண்ணீர் குறைவாகவே இருப்பதாக சென்னை மெட்ரோவாட்டர் விவரங்கள் தெரிவிக்கின்றன.

வளங்குன்றாத அளவில் நகரமயமாக்கும் முயற்சிகளை மேற்கொள்வதில் மாநிலத்தில் வேகம் இல்லை. வாராந்திர ஒழுங்குமுறை சந்தை, வீட்டு வசதி யூக வணிகத்துக்காக நிலங்களைப் பயன்படுத்தும் அரசியல் தொடர்புள்ள சக்திகள் ஆகியவற்றின் வேகத்தோடு அரசு நிர்வாகத்தினால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஏரிக்கரைகள், சதுப்பு நிலங்களை ஆக்கிரமிக்கும் அரசியல் பின்னணி கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி அமைப்புகளின் மூலமாக பொறுப்பு கூற வேண்டிய நகர நிர்வாகம் இல்லாமை ஆகியவை அடுத்த பிரச்சினைகள் என்றாலும், மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்து வரும் அழுத்தமானது, இந்த வெள்ளக் காலத்தில் தெளிவாக வெளிப்பட்டது: சென்னையில் 200 மொபைல் நடமாடும் மருத்துவ வசதிகளை அரசு ஏற்படுத்தியது.

சென்னையில் சராசரி கடல் மட்டத்துக்கு மேலே 2 மீட்டர் முதல் 10 மீட்டர் வரையில் அமைந்துள்ள மழை, வெள்ள நீர் வடிகால்களின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு குறித்த அணுகுமுறை என்பது ஆர்வத்துக்குரிய ஆய்வாக இருக்கும். 7 மீட்டருக்கு மேல் அகலமுள்ள சாலைகளுக்கு வடிகால் வசதி, பிரீகாஸ்ட் அமைப்புகள், கிடைக்கும் என சென்னை மாநகராட்சி கூறுகிறது.

ஆனால் வெள்ள நீரை ஒரு முடிவு எல்லைக்கு கொண்டு செல்லும் வடிகால்களின் ஒருங்கிணைப்பு அமைப்பு பற்றி அது எதுவும் பேசுவதில்லை. மாறாக, இவை அந்தந்தப் பகுதிகளில் மட்டுமே தண்ணீரை வெளியேற்றி வெள்ளத்தை தடுப்பதை நோக்கமாகக் கொண்டவை. ஆனால் பலத்த மழை பெய்தால், மோசமாக பராமரிக்கப்படுகிற, சேறும் சகதியும் படிந்துள்ள இந்த அமைப்புகளால் தண்ணீரை சேமிக்க முடியாது.

மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகள் உள்பட, சென்னை மாநகராட்சி பராமரிப்பதாகக் கூறும் 30 கால்வாய்கள் அமைப்புடன் வடிகால்கள் எவ்வாறு இணைக்கப்படுகின்றன என்பது இன்னொரு கேள்வியாகும். உதாரணமாக, கால்வாய்கள் உள்ள பகுதிகளிலும் கூட – தி.நகர், ஜி.என். செட்டி ரோடு, தியாகராயா சாலை முழுவதும், கண்ணம்மாபேட்டை அருகே- தொடர்ந்து வெள்ளம் சூழ்கிறது. மாம்பலம் கால்வாய் மூன்று நகராட்சி மண்டலங்கள் வரை பரவியிருக்கிறது.

பங்கிங்ஹாம் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், அடையாறு நதி ஆகியவற்றுக்காக பின்லாந்திலிருந்து ஒரு ஆம்பிபியன் எந்திரத்தையும், எம்ஜிஆர் கால்வாய்க்காக சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு ரோபோ எக்ஸ்கவேட்டரையும் சமீப ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி வாங்கியிருக்கிறது.
இவை எதுவும் இப்போதைய முடக்கத்தை தடுக்கவில்லை என்பதால், சங்கடப்படுத்தும் சில கேள்விகள் எழுகின்றன.

வடிகால்களின் வடிவமைப்பில் கடுமையான குறைபாடுகள் உள்ளனவா? முறையான அமலாக்கத்தை தடுக்கும் வகையில் ஊழல் நிலவுகிறதா? உயர் திறன் கொண்ட கொண்ட வடிகால்களின் வரைபடத்தை தமிழ்நாடு அரசு தயாரிக்க வேண்டியதும், இன்டர்நெட்டில் தெருக்கள் அளவில் அது கிடைக்கும் என்றால் எதிர்காலத்தில் குடிமக்களே அவற்றைக் கண்காணிப்பதுமே இந்தக் கேள்விகளுக்கான பதிலாக இருக்கும்.

எப்படியிருந்தாலும், சென்னையின் வடிகால் அமைப்புகளுக்கு உலக வங்கி (கூவம் மற்றும் அடையாறு ஆற்றுப் படுகைகள்), ஜெர்மனி வளர்ச்சி வங்கி KfW (கோவளம் ஆற்றுப் படுகை), ஜப்பான் ஏஜென்சி JICA (கொசஸ்தலையாறு படுகை) ஆகியவற்றின் நிதி உதவிகள் உள்ளன. எல்லாம் சேர்ந்து சில ஆயிரம் கோடி ரூபாய்கள் இருக்கும் என சென்னை மாநகராட்சியே தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நீரோட்டத்துக்கு மேலே அமைந்துள்ள ஏரிகள் உள்பட பெருநகர சென்னையில் உள்ள பாசன ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நிலையை மதிப்பிடுவது, கட்டுப்படுத்த முடியாதபடி, நகரத்தையே முடக்கும் வகையில் பாய்கின்ற பல்லாயிரம் மில்லியன் கன அடி தண்ணீரைத் தடுப்பதற்கு உதவும் வகையில் வெள்ளநீரை சேகரிக்கின்ற தொடர்ச்சியான கால்வாய்கள் அமைப்பை உருவாக்குவதற்கு முக்கியமாகும்.

வடிகால்களின் வடிவமைப்பில் கடுமையான குறைபாடுகள் உள்ளனவா? முறையான அமலாக்கத்தை தடுக்கும் வகையில் ஊழல் நிலவுகிறதா? உயர் திறன் கொண்ட கொண்ட வடிகால்களின் வரைபடத்தை தமிழ்நாடு அரசு தயாரிக்க வேண்டியதும், இன்டர்நெட்டில் தெருக்கள் அளவில் அது கிடைக்கும் என்றால் எதிர்காலத்தில் குடிமக்களே அவற்றைக் கண்காணிப்பதுமே இந்தக் கேள்விகளுக்கான பதிலாக இருக்கும்

செம்பரம்பாக்கம் ஏரி நீர்த்தேக்கத்துக்கு மேல் பகுதியில் 150, 200 ஏரிகள் இருப்பதாக நீரியல் அறிவியலாளர் எஸ். ஜனகராஜன் மதிப்பிடுகிறார்.

இந்த ஒரு பெரிய நீர்த்தேக்கத்தை தூர் வாரினாலே போதும்இப்போதுள்ளதைப் போல இருமடங்கு தண்ணீரை சேமிக்கலாம் என்றும், அது 7 டிஎம்சி அளவுக்கு இருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் திமுக அரசுக்கும் முன்னுள்ள கடினமான பணியாக இருக்கும். பழைய பாணியிலான அரசியல் ஆதரவு, உடனடி உதவி என்ற காட்சி தோற்றத்துக்கும் அப்பால், தொடர்ந்து ஏற்படுகின்ற வெள்ளத்தினால், இந்தியாவில் தொழில் துறையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டுக்கும், நகர நிர்வாகத்தின் ஆற்றலுக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து முதலமைசர் கவலை கொள்ள வேண்டும்.

சென்னை இப்போது ஆட்டோமொபைல் வாகன உற்பத்தி மையமாகவும், தகவல் தொழில்நுட்ப பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் பல்வேறு சேவைகளின் மையமாகவும், உலக வங்கிக்கு தரவுகள் சேகரிப்பகமாகவும், சர்வதேச அளவில் நோயாளிகளுக்கான மருத்துவத் துறை மையமாகவும் விளங்குகிறது. ஆனால், மீண்டும் மீண்டும் தடங்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

சென்னையின் பிரச்சினைகள் மற்ற பெருநகரங்களைப் போன்றதாக இருக்கலாம். அவற்றுடன் ஒப்பிடுகையில் சென்னை இன்னும் சற்று மேம்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால் இது நமக்கு நாமே திருப்திப்பட்டுக் கொள்ளும் கண்ணோட்டம் என்பதை 2021 வெள்ளம் தெளிவாக்கி இருக்கிறது. சென்னை நகரத்தின் உயர்ந்த செயல் ஆற்றலுக்கு இது நியாயம் செய்வதாக இல்லை.


Share the Article