Read in : English

Share the Article

சமூக ஊடகங்கள் தவிர்க்க இயலாத முக்கியத்துவம் பெற்று வரும் இந்தக் காலத்தில் சமூக ஊடக பிரபலமான சவுக்கு சங்கர், பகிரங்கமாகக் கூறும் கருத்துகள் சமூக வெளியில் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. அமைப்பு ரீதியாக செயல்படுகிற மெயின் ஸ்ட்ரீம் மீடியாவின் நம்பகத்தன்மை என்பது கொஞ்சம் குறைந்திருக்கிறது. சில விஷயங்களைப் பெரிதாகப்படுகிறது.

சில விஷயங்களை மறைக்கிறார்கள். இதிலே ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா போன்ற சந்தேகங்கள் இருப்பதால் நம்ம தொடர்ச்சியாக பல பேர்கூட பேசி வருகிறோம்.. அந்த வரிசையில், செய்தி ஊடகங்களை நம்ப முடியுமா என்பது குறித்து இன்மதி யூடியூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் அளித்த நேர்காணல்:

இன்மதி: அரசாங்க வேலையில் இருந்தவர் நீங்கள்>. இப்போது மீடியா பர்ஸனாக இருக்கிறீர்கள். இந்த மாதிரி ஜர்னலிஸம் எல்லாம் சரி வராது. நம்ம வேற மாதிரி செய்யணும் என்று பேஸ் புக்கில் போட்டிருந்தீர்கள். உங்கள் பார்வையில் ஜர்னலிஸம் என்றால் என்ன?

சவுக்கு சங்கர்: மொத்தமாக மெயின் ஸ்ட்ரீம் மீடியாவைத் தவிர்த்திட முடியாது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் செய்தி ஊடகத்தின் தரம் குறைந்துவிட்டது. 1991ஆம் ஆண்டு என்று ஏன் சொன்னேன்னா, அந்தக் காலத்தில்தான் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் வந்தது. மீடியா துறையில் மீடியா சார்ந்த நபர்கள் மட்டுமல்லாமல் பல துறைகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க ஆரம்பித்தனர். பல செய்தி ஊடக நிறுவனங்கள் சிமெண்ட், தொழில், விளையாட்டு, திரைப்படம் போன்ற பல தொழிகளைச் செய்து வரும் சூழ்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு நெருக்கடிகள் இருக்கத்தான் செய்யும்.

பிரபலமான செய்தி ஊடகத்தில் வேலை செய்தால், அரசை எதிர்த்து ஒரு செய்தி போடுகிறேன் என்று சொன்னால், இது வேண்டாம் என்று நிர்வாகம் சொல்லும்.. இந்தச் செய்தி, பத்திரிகையில் வந்தால், அவர்கள் வருமான வரி சோதனையைச் சந்திக்க வேண்டி வரும். அரசு விளம்பரங்கள் நிறுத்தப்படும் போன்ர சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். இதனால் பல செய்திகள் வராமல் போய்விடுகின்றன.

மொத்தமாக மெயின் ஸ்ட்ரீம் மீடியாவைத் தவிர்த்திட முடியாது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் செய்தி ஊடகத்தின் தரம் குறைந்துவிட்டது

தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங், விளம்பர நிறுவனங்களின் அழுத்தம் போன்ற இன்னல்கள் இருக்கின்றன. செய்தித்தாள் என்று வரும்போது, அதை அச்சடிப்பதற்கு 25 ரூபாய் செலவு ஆகும். ஆனால் அந்த செய்தித்தாளை 6 ரூபாய்க்கு விற்கிறார்கள். இந்த இழப்பை ஈடுகட்ட செய்தித்தாள்கள் விளம்பரங்களைச் சார்ந்து இருக்க வேண்டியதாக உள்ளது. இந்த நிலையில் விளம்பர நிறுவனங்கள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். இந்த சிக்கலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதை பேலன்ஸ் பண்ணும் வகையில் இணையதள ஊடகம் வளர்ந்து வருகிறது என்பது என்னுடைய கருத்து.

இன்மதி: எந்த மாதிரி செய்திகள் இருட்டிப்பு செய்யப்படுகின்றன?

சவுக்கு சங்கர்: சுமார் ரூ.60 கோடி ஊழல் குறித்த போபர்ஸ் விவகாரம் பற்றி ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளும் எழுதின. அது அரசாங்கத்தையே மாற்றி அமைத்தது. அதுபோல இப்போ யாரும் எழுத அனுமதி கொடுப்பது இல்லை. பெகாசஸ், கொரோனா எண்ணிக்கை போன்ற முக்கிய செய்திகள் ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பத்திரிகைகளில் வந்திருக்க வேண்டியது. ஆனால், அந்த விஷயங்கள் பேரலல் மீடியாவில் வந்திருக்கிறது. இதனால் இந்தச் செய்திகளின் மதிப்பு குறைகிறது.

இன்மதி: அச்சு ஊடகமாக இருக்கட்டும், தொலைக்காட்சியாக இருக்கட்டும் தமிழ்நாட்டைப் பொருத்தவரை எப்படி?

சவுக்கு சங்கர்: வட இந்தியா அளவுக்கு தமிழ்நாடு மோசம் இல்லை. ஆனாலும் 2006ஆம் ஆண்டில் கருணாநிதி ஆட்சியிலிருந்து மோசமடைய தொடங்கியது. 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் விழுப்புரத்தில், உள்ள அரசு உணவு கார்ப்பரேஷன் கிடங்கில் மாதிரியை எடுத்தது தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சியைச் சேர்நத் மணிகண்டன் கைது செய்யப்படுகிறார். ஜெயலலிதா காரின் குறுக்கே பதினைந்து பத்திரிகையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்த பிறகுதான் அவர் வெளியே விடப்பட்டார். கருணாநிதி கைது, கடற்கரை ஊர்வலத்தை செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்கள் தனிப்பட்ட ரீதியில் தாக்கப்பட்டனர்.

பத்திரிகையாளர்களால் வழக்குத் தொடரப்பட்டது. அரசு குறித்த எந்தத் தயக்கமும் இல்லாமல் எழுதினார்கள். 2006இல் கலைஞர் அரசுக்கு எதிராகச் செய்திகல் பத்திரிகைகளில் வருவதற்கு முன்னதாகவே தடுக்க ஆரம்பித்தார். 2011இல் ஜெயலலிதாவும் அதைத் தொடரந்தார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை திமுக ஊடகங்கள் தவிர வேறு யாரும் சரியாகக் கவர் செய்யவில்லை.

2015–16ஆம் ஆண்டுகளில் அரசு கேபிள் வந்துவிட்டது. பேப்பர் பிரிண்ட் விலை எல்லாம் கூடிவிட்டது. அரசு ஆதரவு இல்லாமல் செய்தித்தாள் வெளியிடவே முடியாது என்ற நிலைமை வந்தது. ஆனால், ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்கிற மாதிரி பேரர்லல் மீடியா தமிழ்நாட்டில் இல்லை. அதை யூடியூப் சமாளிக்கிறது. எந்த ஒரு போதுமான ஆதாரம் இல்லால், யூகத்தின் அடிப்படையில் சோசியல் மீடியாவில் செய்திகளை வெளியிடுகிறார்கள்.

மேலும் படிக்க:

கார்த்திக் கோபிநாத் கைது: இனி கிரவுட் ஃபண்டிங் அடிவாங்குமா?

ஜி ஸ்கொயர்- ஜூனியர் விகடன்-கெவின் வழக்கு: எதிரெதிர் திசைகளில் அரசும், ஊடகமும்

இன்மதி: ஜர்னலிஸத்துக்குன்னு தனிக் கொள்கை, கோட்டுபாடுகள் எல்லாம் இருக்கிறது. இதையெல்லாம் சோசியல் மீடியா பின்பற்றுவதிலலை. அதனால்தான் சோசியல் மீடியா பிரபலமாக இருக்கிறது. இதனால் ஜர்னலிஸம் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது. மறுபக்கத்தில் இருந்து நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சவுக்கு சங்கர்: முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற எந்த சோசியல் மீடியாவாக இருந்தாலும், ஆதாரம் இல்லாமல் ஒரு பொய் எழுதப்பட்டால், மக்கள் வெகுவிரைவில் கண்டுபிடித்து விடுவார்கள். தனிப்பட்ட ஆதரவாளர்கள் அந்தப் பொய்யை ஆதரித்தாலும் அதனுடைய பரபரப்பு சில நாட்கள்தான் நீடிக்கும். தினமும் செய்தித்தாள் படிக்கிற வாசகர்கள், நீங்கள் பொய்தான் எழுதுகிறீர்கள் என்பதைக் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள்.

இதனால் உங்களுடைய நம்பகத்தன்மை போய்விடும். அதன்பிறகு, நீங்கள் உண்மையே எழுதினாலும் யாரும் நம்பமாட்டார்கள். மெயின் ஸ்டீரிம் பத்திரிகையாளர்கள், சோசியல் மீடியா தவிர்தது செய்தி ஊடகங்களில் செய்திகளை எழுத வேண்டும். சோசியல் மீடியாவில் எழுதினால் அது பத்தோடு பதினொன்றாகப் போய்விடும்.

மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். பழைய மாதிரி எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது. காலையில் செய்திதாள்களில் செய்தி வருவதற்கு முன்னாடியே சோசியல் மீடியாவில் செய்தி வந்துவிடுகிறது

இன்மதி: சோசியல் மீடியாவுக்கும் செய்தி ஊடகங்களுக்குமான தாக்கம் எப்படி வேறுபடுகிறது?

சவுக்கு சங்கர்: இங்கு இரண்டுக்கும் சமமான இடம் இருக்கிறது. ஒரு செய்தி வாசகராக எனக்கு இரண்டு வரியில் செய்தியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சோசியல் மீடியாவில் தெரிந்து கொள்ளலாம். அந்தச் செய்தியோட முழு விவரமும் வேணும் என்றால் செய்தித்தாளில் தெரிந்து கொள்ளலாம். இந்த இரண்டையும் சரியாகப் பயன்படுத்தினால் அதனுடைய சக்தியைக் கட்டுக்குள் வைக்கலாம். தொலைக்காட்சி மீது எனக்கு பெரிய பிடிப்பு இல்லை. ஏன்னா, பிரிண்ட் மீடியாவில் கூட இன்னும் சில கொள்கைகளைக் கடைபிடிக்கிறாங்க.ஆனால் தொலை’ காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கிற்காகச் செய்கிறார்கள்.

தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கிற்க்காக பண்ணுகிறார்கள். பிரைம் டைம் விவாதத்தில் இதை வைத்துக் கொள்ளாதீர்கள் என்று மத்திய, மாநில அரசுகளிடமிருந்து தகவல் வரும். வாசகராக எனக்கு இரண்டு பக்கச் செய்திகளும் வேண்டும்.

இன்மதி: இப்போது ஜி ஸ்கொயர் குறித்து ஒரு செய்தி வந்தது. இதைப் பற்றி நாங்கள் எழுதணும் என்றாலும் எங்ககிட்ட ஆதாரம் இல்லை. இப்படியெல்லாம் பேசிக்கொள்கிறார்கள் என்ற சொல்ல முடிகிறதே தவிர, எழுத முடியவில்லை. ஆதாரம் இல்லாமல் எப்படி எழுதுவது?

சவுக்கு சங்கர்: தமிழ்நாட்டில் இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் முதல் மூன்று இடங்களில் உள்ள நிறுவனங்களிடம் சென்று கடந்த பத்து ஆண்டுகளாக என்ன புராஜக்ட் பண்ணினீர்கள் என்று கேட்டால், அவர்கள் தரும் பதிலிலிருந்து அவர்கள் பட்ட சிரமங்களைத் தெரிந்து கொள்ளலாம். கொரோனா காலத்தில் பொது முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இன்னும் வெளிவர முடியவில்லை. ஒரு அபார்ட்மெண்ட்டில் ஒருவர் காசு கொடுத்து ஒரு பிளாட் புக் பண்ணிவிட்டாலே, அதைக் குறிப்பிட்ட நேரத்தில் முடித்துக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த நிறுவனம் மீது வழக்குப்போடப்பட்டுவிடும். இது ஒருபக்கம்.

மறுபக்கம் ஜி ஸ்கொயர். 2021இல் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களில் 83 புராஜக்ட்டுகளைப் பதிவு செய்தது. அவை அனைத்தும் பிளாட்டுகள். இசிஆர் பகுதியில் பெரிய நிறுவனங்களே தொழில் செய்ய தடுமாறும்போது, இது எப்படி சாத்தியம் என்பதே ஒரு ஸ்டோரி. விளம்பரம் என்பது ஆடம்பரமான விஷயம், பல ரியல் எஸ்டேட் மற்றும் நகை கடைகளின் விளம்பரங்கள் இந்த கொரோன காலத்தில் நின்றுவிட்டது. ஆனால் ஜி- ஸ்கொயரின் விளம்பரங்களை எல்லா சிக்னல்களிலும் காண முடிகிறது. தோனி ஜி- ஸ்கொயரின் பிராண்ட் அம்பாசிடர். இது எப்படி சாத்தியம் என்பதை ஒரு பேட்டி எடுத்தாலே அது ஒரு செய்தி.

இன்மதி: ஆதாரம் இல்லாமல் ஜி- ஸ்கொயரை எப்படி அணுகுவது?

சவுக்கு சங்கர்: அவர்கள் கொடுத்த புராஜக்ட் காஸ்ட், கைடு லைன் மதிப்பு வைத்துப் பார்க்கும் போது இந்தச் செலவு எந்த வழியில் வருகிறது, ஜி ஸ்கொயர் பெயரில் எதுக்கு என்ற கேள்விக்கு பதில் தெரிந்தாலே ஒரு ஸ்டோரி கிடைத்துவிடும். இதற்கு பின்னால் குற்றம் நடந்திருக்கிறது என்பதை மக்கள் கணித்துவிடுவார்கள். 90களில் இரண்டாயிரம் ரூபாய் கட்டினால் கலர் டி.வி. தருகிறேன் என்று தொழில் செய்து கொண்டிருந்த ராமஜெயம் என்கிற பாலா இன்று மூவாயிரம் கோடி ரூபாய்க்கு தமிழ்நாட்டில் எப்படி ரியல் எஸ்டேட் செய்கிறார்? துபாயிலிருந்து வெளிவருகிற கலீஜ் டைம்ஸ் இதழில் எப்படி இரண்டு பக்க விளம்பரம் கொடுக்கிறார்? எங்கிருந்து இவருக்குப் பணம் வருகிறது? இவரது பிளாட்களை வாங்குபவர்கள் தமிழகத்தில் இருகிறார்களா? துபாயில் இருகிறார்களா? இதுதான் ஸ்டோரி.

நான் அந்த லிங்க்-குகாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு அண்ணா நகர் கார்தியோட பணம் ஜி- ஸ்கொயர்ல இருக்குனு தெரிஞ்சிருக்கு, அவருக்கு பணம் எங்க இருந்து வந்தது என்பது தெரிஞ்சால், அது தான் அடுத்த ஸ்டோரி.

இன்மதி: முக்கிய செய்திகளை பேப்பர்ல போடாம விடுறதுனால, அதனுடைய நீடிப்பு தன்மை பாதிக்கபடுதா?

சவுக்கு சங்கர்: பேப்பர்ல பேசி வைக்கப்பட்டு மறைக்கபட்ட செய்தி மீண்டும் வரலாம், வராமலும் போகலாம். உதரணத்துக்கு பேரறிவாளன் செய்தி 8 முக்கிய செய்திதாள்களால் மறைக்கபட்டது. சோசியல் மீடியா அதை வெளிக் கொண்டு வருவதுடன், அந்த 8 செய்தித்தாள்களையும் விமர்சிக்கும். இதுதான் சோசியல் மீடியாவின் பலம். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். பழைய மாதிரி எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது. காலையில் செய்திதாள்களில் செய்தி வருவதற்கு முன்னாடியே சோசியல் மீடியாவில் செய்தி வந்துவிடுகிறது. மெயின் ஸ்ட்ரீம் மீடியாவே நியூஸ் வெளியிடுவதற்கு சோசியல் மீடியாவைச் சார்ந்து இருககிறது.

இன்மதி: வருங்காலத்தில் இந்த இரண்டு மீடியாவும் சேருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

சவுக்கு சங்கர்: ஏற்கெனவே இது தொடங்கிவிட்டது. பிரிண்டை விட, டிஜிட்டல் மீடியா அதிகம் ஆகிவிட்டது. நான் இப்போது படிக்கிற நியூஸ் எல்லாம் ஆன்லைன்லதான். இதன் வலிமையை எந்த மீடியா புரிந்து கொள்கிறதோ அது சர்வைவ் ஆகும். பெரும்பாலான மீடியாக்கள் இதை ஒருங்கிணைக்க ஆரம்பித்துவிட்டனர். பிரிண்ட்டைவிட, டிஜிட்டல் மீடியாவில் வருமானம் அதிகம் வர ஆரம்பித்துவிட்டது.

சமீபத்தில் தமிழ்நாட்டில் முக்கியமான செய்திதாளோட எடிட்டர் சொன்னாரு “எங்க முதலாளியே அதிகம் பிரிண்ட் பண்ணாதனு சொல்லுறாரு, போதுமான விளம்பரம் வந்ததுனா பத்தாயிரம் காபி கம்மியா பிரிண்ட் பண்ணுனு என்று சொல்லுவாரு”இது இரண்டையும் ஒருங்கிணத்தால்தான் சர்வைவ் பண்ண முடியும்.

இன்மதி: சவுக்கு சங்கரின் அடுத்து திட்டம் என்ன?

சவுக்கு சங்கர்: எனக்கு லட்சியம் என்பதெல்லாம் இல்லை. அனைத்து செய்தி ஊடகங்கள் நியூஸ் போடுவதற்கு முன்னால், நான் உண்மையான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான். நான் இந்த துறைக்கு புதுசாக இருந்தாலும், எனக்கு என்று ஒரு நெட்வொர்க் இருக்கு. எல்லா இடத்தில் இருந்தும் என்னால் செய்திகளை உறுதிப்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல், நல்ல செய்திகளை மக்களுக்குக் கொடுக்க நான் எந்தக் கட்டணமும் வாங்குவதில்லை. இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இதுதான் என்னுடைய இலக்கு.

எந்த சூழ்நிலையிலும் நம்பகத்தன்மை குறைத்துவிடக் கூடாது என்பது தான் என்னுடைய ஒரே கொள்கை. ஒரு நல்ல செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை என்றால் அதைப் போட மாட்டேன். அந்தத் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் என்னோட லட்சியம், குறிக்கோள் எல்லாம்.


Share the Article

Read in : English