Read in : English

Share the Article

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் தற்போது பரோலில் இருக்கும் அறிவு என்கிற பேரறிவாளனின் சிறை வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

பேரறிவாளன் விடுதலை சில விஷயங்களை உள்ளடக்கி உள்ளது. ராஜீவ் காந்தியைக் கொல்வதற்குப் பயன்பட்ட மனித வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட எலெக்டரிக் டெட்டனேட்டரில் பயன்படுத்துவதற்காக 9 வோல்ட் பேட்டரியை வாங்கியதில் அவருக்குப பங்கு இருந்தாகக் குற்றம்சாட்டப்பட்டது. அந்த ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டைத் தயாரித்ததில் நளினியின் கணவர் முருகனுக்கு முக்கிய பங்கு இருந்ததாக போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. கொழும்பில் போலீஸ் காவலில் இருக்கும் குமார் பத்மநாபன்தான் வெளிநாடுகளில் வெடிமருந்துகளை வாங்கியதாக அந்த வழக்கில் கூறப்பட்டது.

1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக வந்த ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்ட மேடைக்கு நடந்து செல்லும்போது தனு தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். அப்போது ராஜீவ்காந்தி உள்பட 16 பேர் இறந்து போனார்கள்.

இரண்டாவது விஷயம். 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சிபிஐ முன்னாள் அதிகாரி வி. தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலத்தைத் தாக்கல் செய்தார். பேரறிவாளனை விசாரணை செய்தபோது, அவர் வாங்கிய இரண்டு பேட்டரிகள் எந்தக் காரணத்துக்காக வாங்கப்பட்டது என்பது குறித்தும் எதற்காகப் பயன்படுத்தப்பட போகிறது என்பது குறித்தும் அவருக்கு எதுவும் தெரியாது என்று அவர் குறிப்பிட்டார்.

எதற்காக அந்த பேட்டரி பயன்படுத்தப்படப் போகிறது என்பது தனக்குத் தெரியாது என்று அவர் கூறிய வாக்குமூலம் சிபிஐ அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தியாகராஜனின் அறிக்கைப்படி, பேரறிவாளனின் வாக்குமூலம் சிபிஐ அறிக்கையில் இடம் பெறவில்லை என்பதும் முக்கியக் காரணம்.

பேரறிவாளன் சமீபத்தில் பரோலில் வெளிவந்துள்ளார். நளினி, முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன் ஆகியோர் தற்போதும் சிறையில் இருக்கிறார்கள்.

தொடக்க நிலை விசாரணையில், பேரறிவாளனுக்கு எந்த அளவுக்கு சதித்திட்டம் தெரியும் என்பது குறித்து சிபிஐக்கு உறுதியாக எதுவும் தெரியாது என்கிறார் தியாகராஜன். எப்படித் திட்டமிடப்பட்டது என்பது குறித்து சுபாவுக்கும் மனித வெடிகுண்டாக இருந்த தனுவுக்கும்தான் தெரியும் என்பது 1991ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி விடுதலைப் புலிகள் இயக்க புலனாய்வு அமைப்பின் தலைவர் பொட்டு அம்மனிடமிருந்து ராஜீவ் கொலைத் திட்டத்துக்கு மூளையாக இருந்த சிவராசனுக்கு வந்த வயர்லெஸ் செய்தி, சிபிஐக்குத் தெரிய வந்தது.

கொலை செய்யப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னால் ராஜீவ்காந்தியிடம் பேசிய பத்திரிகையாளர் நீனா கோபால் எழுதிய, தி அசாசினேஷன் ஆஃப் ராஜீவ்காந்தி என்ற புத்தகத்தில் மே 21ஆம் தேதி காலைதான் தனு, நளினியிடம் ராஜீவ்காந்தி கொல்லப்படப் போவது குறித்த தகவலைச் சொல்லி இருக்கிறார் என்றும் அன்றைய தினம் தனு அணிந்திருந்த பச்சை நிற சல்வார் கமீஸை கொண்டு வந்தவரும் நளினிதான் என்றும் குறிப்பிட்டுள்ளார். 1990களில் தமிழ்நாட்டில் பெண்கள் வழக்கமாக அணியும் ஆடையை தனு அணியவில்லை. சிவராசன், பத்திரிகையாளர் போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் வெள்ளை நிற குர்தா பைஜாமா அணிந்து இருந்தார்.

பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் பிறந்தவர். கைது செய்யப்பட்ட அந்தக் காலத்தில் அவருக்கு 20 இது இருக்கும். அவரது பெற்றோர்கள் பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஆதரவாக பேரறிவாளன் இருந்தாலும் இதில் நளினியும், பேரறிவாளனும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

2014இல் நளினி, முருகன், சாந்தன், ஆகியோருடன் சேர்த்து பேராறிவாளனுக்கும் 2014இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. தனது சகோதரர் பாக்கியநாதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் நளினிக்குத் தொடர்பு ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

சிறைதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் பல ஆண்டுகள் தனிமைச் சிறையில் இருந்தார். சிறையில் இருந்த காலத்தில் பிசிஏ படித்தார். பின்னர் எம்சிஏ படித்தார். வேறு சில சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளையும் படித்தார். அவருக்கு உடல்நலத்தில் பல பிரச்சினைகள் இருந்ததால், தொடந்து மருத்துவ சிகிச்சை அவருக்குத் தேவையாக இருந்ததது.

பேரறிவாளன் சமீபத்தில் பரோலில் வெளிவந்துள்ளார். நளினி, முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன் ஆகியோர் தற்போதும் சிறையில் இருக்கிறார்கள்.

பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள், தனது மகன் பேரறிவாளனின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார். அதற்காக நடந்த சட்டப் போராட்டங்களிலும் அவருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அத்துடன், ஊடகங்களின் வழியாக அவர், பேரறிவாளனின் விடுதலையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். பேரறிவாளன் விடுதலைக்கு ஆதரவாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்து தனது கோரிக்கைக்கு ஆதரவு தேடியவர் அவர்.


Share the Article

Read in : English