Read in : English

Share the Article

அது வருவதற்கு நீண்ட காலமாயிற்று. ஆனால் இப்போது வந்துவிட்டது. உங்கள் ரூட்டில் அடுத்த மாநகர்ப் போக்குவரத்துக் கழக (எம்டிசி) பேருந்தினை உங்கள் அலைபேசியிலே தெரிந்துகொள்ளலாம். பேருந்து வருமா, வராதா என்று ஊகம் செய்யும் சிரமம் பிரயாணிகளுக்கு மிச்சம். ’லாம்ப்’ என்ற செயலியில் சென்னைப் பேருந்துகளைக் கண்காணிக்கலாம். கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது அந்தச் செயலி.

அந்தச் செயலி பின்வரும் முக்கிய சேவைகளைப் பிரயாணிகளுக்குத் தருகிறது:

·எல்லா பஸ் ரூட்டுகளின், நிறுத்தங்களின் பட்டியலைத் தருகிறது

·அருகிருக்கும் பேருந்து நிறுத்தங்களைக் கண்டுபிடித்து பஸ் வரும் நிஜ நேரத்தைத் தெரிவிக்கிறது

· டிரிப் பிளானர்

·ஆரஞ்சுக்கலர் எஸ்ஓஎஸ் செட்டிங்; அதில் அவசரகாலத் தொடர்பு எண்ணை இணைக்கலாம்

·புகார்ப் படிவம்

·31 எம்டிசி பணிமனைகள் பற்றிய தொடர்புத் தகவல்கள்

இந்த எழுத்தாளர் லாம்ப் செயலியைப் பயன்படுத்த முயற்சி செய்து பார்த்திருக்கிறார். இது 99 சதவீதம் சரியாகவே இருக்கிறது. மேற்கு மாம்பலம், அண்ணாசாலை எல்ஐசி, மேற்கு சைதாப்பேட்டை ஆகிய இடங்களைச் சோதனைக்காகவே செயலியில் போட்டுப் பார்த்ததில் கிடைத்த நிஜ நேரத்து பஸ் பற்றிய தகவல்களில் ஒன்றிண்டு தவிர பெரும்பாலும் சரியாகவே இருந்தது. எல்லா எம்டிசி பேருந்துகளிலும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருப்பதால் பேருந்து வழித்தடத்தைக் கண்டுபிடிக்கும் அமைப்பு சரியாகவே வேலைசெய்யும் என்று தமிழக அரசு சொல்லியிருக்கிறது.

செயலியில் உள்ள டிரிப் பிளானரில் எல்லாச் சாத்தியங்களும் இணைக்கப்படவில்லை. கோடம்பாக்கத்திலிருந்து சைதாப்பேட்டை ஜெயராஜ் தியேட்டருக்குச் செல்லும் பரிசோதனைப் பயணத்திற்கு அந்தச் செயலி சொல்லும் வழியிது: பேருந்தில் ஏறுவதற்கு முன்பும், இறங்கிய பின்பும் நடந்து செல்லலாம். ஆனால் அண்ணாசாலைக்குப் பயணம் செய்து அங்கிருந்து 18கே பேருந்தை (பிராட்வே-மேற்கு சைதாப்பேட்டை) அல்லது எஸ்18கே (எம்ஜிஆர் சென்ட்ரல் – பார்ஸ்ன் நகர்) பேருந்தைப் பிடிக்கலாம் என்று செயலி சொல்லவில்லை. மினிப்பேருந்தில் (எஸ்35) அசோக்நகர் வழியாகப் பயணம் செய்யலாம் என்பதையும் செயலி சொல்லவில்லை. ஆனால் இந்த வழியில் போவதில் மொத்த காத்திருப்பு நேரம் 45 நிமிடங்கள்.

இந்த எழுத்தாளர் லாம்ப் செயலியைப் பயன்படுத்த முயற்சி செய்து பார்த்திருக்கிறார். இது 99 சதவீதம் சரியாகவே இருக்கிறது. மேற்கு மாம்பலம், அண்ணாசாலை எல்ஐசி, மேற்கு சைதாப்பேட்டை ஆகிய இடங்களைச் சோதனைக்காகவே செயலியில் போட்டுப் பார்த்ததில் கிடைத்த நிஜ நேரத்து பஸ் பற்றிய தகவல்களில் ஒன்றிண்டு தவிர பெரும்பாலும் சரியாகவே இருந்தது.  

எது நல்லது?

செயலி காட்டும் வரைபடம் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தங்களை பயணிக்காக படம்வரைந்து வைத்திருக்கிறது. எனினும் பேருந்து நிறுத்தங்களைப் பற்றி பயனார்களுடன் அது உறவாடுவதில்லை. அசையும் இடங்சுட்டும் அமைப்பு அருகிருக்கும் பேருந்து நிறுத்தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறது.

செயலியின் அம்சங்களைக் காட்டும் ஸ்கிரீன் ஷாட்டுகள்.

கீழே இருக்கும் பேருந்து நிறுத்தங்களின் கட்டமைப்புக் கோணம் பயனார்களுடன் உறவாடுகிறது. ஒவ்வொரு நிறுத்தமும் தூரத்தால் குறிக்கப்படுகிறது. மேலும் நிஜநேரத்தில் அங்கே வந்துசேரும் பேருந்துகளும் சுட்டிக்காட்டப்படுகின்றன. செயலியில் ஒவ்வொரு தனிப்பட்ட பேருந்தும் ஒரு ஃபிளீட் எண்ணால் அடையாளம் காணப்படுகிறது. மொத்தம் இருக்கும் 3,233 எம்டிசி பேருந்துகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிஎண் இருக்கிறது. அதை வைத்து பேருந்தை அடையாளம் காணும் வசதி பயணிக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. உதாரணமாக, வெள்ளி மதியம் 2 மணிக்கு விருந்தாவன் தெருவுக்கு வரும் 11ஜி பேருந்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் எண் ஜே0479. அதுதான் ஃபிளீட் எண்.

இந்த வரைபடம் மாலைப் பொழுதுகளில் பெரியதொரு வரம். குறிப்பிட்ட வழித்தடத்தில் கடைசிப் பேருந்தைக் கண்டுபிடிக்க இது உதவுகிறது.

செயலிக்குத் தேவைப்படுவது

  2011-லிருந்து ஒரு பத்தாண்டு காலம் அஇஅதிமுக ஆட்சியின் போதே இந்த நவீனக் கட்டமைப்பு உருவாகும் என்றவோர் எதிர்பார்ப்பு இருந்தது. 2016-ல் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் பயணிகளுக்கு நிஜநேரத்துத் தகவல் கொடுக்கும் வகையில் ஓர் அல்கோரிதத்தைத் தயார் செய்தது.

பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் எங்கே இருக்கின்றன என்று மேலோட்டமாக பார்வையிடுவதற்கு வரைபடம் உதவுகிறது. நல்ல எதிவினையாற்றும் திறன்தான்! ஆனால் பலசமயம் இந்த அம்சம் மெதுவாகவும் செயல்படுகிறது. இப்போது இது மங்கலான பச்சை நிறத்தில் இருக்கிறது. இன்னும் பிரகாசமான நிறம் தேவை. மேலும் ‘ஐகான்’கள் பிரதானமாக இல்லை; சிறியதாக இருக்கின்றன. கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் பேருந்து வரும்போது ஒலிமூலம் தகவல் வழங்கும் வசதி இல்லை.

கூகுளில் தேடும்போது சென்னை பயணியர்க்கு நிஜநேரத்துத் தகவல் கொடுக்கக்கூடிய இரண்டாவது செயலி கிடைத்தது. சலோ என்ற பெயர் கொண்ட அந்தச் செயலி மும்பை உட்பட பல மாநகரங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது. மும்பை, கொச்சி உட்பட ஏழு மாநகரங்களில் மின் பயண பாஸ்களை விற்பதற்கு அந்தச் செயலி அதிகாரம் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சென்னைப் பேருந்துகள் பற்றிய நிஜநேரத்து தகவல்களை சலோ தருகிறது. பேருந்துகளைக் காட்டும் நேரலை வரைபட ஊடாடு தளமும் அதில் இருக்கிறது. கருத்துக் கேட்டு அனுப்பிய செய்திக்கு சலோ பதிலளிக்கவில்லை.

சென்னையில் பயணம் செய்யும் பயணிக்கு உதவக்கூடிய செயலியைக் கண்டுபிடிக்க இட்டுச்செல்லும் சாலை நீளமானது. 2011-லிருந்து ஒரு பத்தாண்டு காலம் அஇஅதிமுக ஆட்சியின் போதே இந்த நவீனக் கட்டமைப்பு உருவாகும் என்றவோர் எதிர்பார்ப்பு இருந்தது. 2016-ல் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் பயணிகளுக்கு நிஜநேரத்துத் தகவல் கொடுக்கும் வகையில் ஓர் அல்கோரிதத்தைத் தயார் செய்தது. சில வருடங்கள் எம்டிசி சில நிறுத்தங்களில் தகவல் பலகைகளை வைத்தது. ஆனால் பின்பு அவை விலக்கிக் கொள்ளப்பட்டன. தற்போதைய செயற்பாடு ‘லொக்கேட் அண்ட் ஆக்ஸஸ் மை பஸ்’ (லாம்ப்) – என் பேருந்து வரும் வழியைக் கண்டறிந்து பிடிப்பது – என்ற செயலி மூலம் நடைபெற்றிருக்கிறது. என்றாலும் கூகுள் பிளேஸ்டோரில் இருக்கும் மின்னஞ்சல் முகவரி மூலம் ‘லாம்போடு’ உரையாட முடியவில்லை.

ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பை வளர்த்தெடுக்க சென்னையில் பயன்படுத்தப்படும் தகவல் தொழில்நுட்பத்தை போக்குவரத்து அமைச்சர் எஸ். சிவசங்கர் தனது பட்ஜெட் மானிய உரையில் எடுத்துரைத்தார். எம்டிசி பேருந்துகளையும், பணிமனைகளையும் நவீனமாக்கல் உட்பட வடிவமைக்கப்பட்ட இந்தப் போக்குவரத்து மேலாண்மை அமைப்புத் திட்டத்திற்கு ஆகும் ரூ.136 கோடி செலவுக்கு ஜப்பான் உலகக் கூட்டுறவு முகமை நிதியளிக்கிறது.

நிஜநேரத்து பயணியர் தகவலின் மையத்தில் இருப்பது தானியங்கி வாகனவழி கண்டறியும் அமைப்பு. இதை ஹார்ட்வேர் உற்பத்தியாளர்கள் சிங்கிள் பேக்கேஜாகவும் அல்கோரிதமாகவும் விற்பனை செய்கிறார்கள். பேருந்துவரும் வழித்தடங்களின் மற்றும் சாலை நிலைமைகளின் அடிப்படையில் பேருந்து எப்போது பயணியை வந்தடையும் என்பதை ஆருடம் சொல்வதுதான் இந்த அல்கோரிதம். அந்த சிஸ்டம்களை ஒப்பந்தம் போட்டு வாங்கும்போது, தொழில்நுட்பத்தில் ஏற்படும் முன்னேற்றங்களையும், நிறைய திறந்தவெளி மூலக்கருவிகள் (ஓபன் சோர்ஸ் டூல்ஸ்) கிடைக்கிறதா என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று உலகவங்கி சொல்கிறது. பேருந்து இயக்குபவர் ஊடாடிச் செயல்படும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்; தரவுகளின் தரமேம்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்; செயலி நிரலி ஊடுதளத்திற்குச் (அப்பிளிகேசன் புரோகிராமிங் இண்டர்ஃபேஸ் – ஏபிஐ) செல்லும் வசதியும் கொண்டிருக்க வேண்டும். தரவுகளை வேறு தயாரிப்புப் பொருட்களுக்கும் மறுபடியும் பயன்படுத்தும் அனுமதியும் அவர் கொண்டிருக்க வேண்டும்.

இப்போது  ஒரு பயணி தன் அலைபேசியில் ஏராளமான வெவ்வேறான செயலிகளை வைத்திருக்க வேண்டியிருக்கிறது. புறநகர் ரயில் பயணத்திற்கு யூடிஎஸ் செயலி; மெட்ரோவிற்கு ஒரு செயலி; எம்டிசிக்கு ஒரு செயலி. மேலும் மின்னணு டிக்கெட் வசதி பேருந்துகளில் கிடையாது. என்றாலும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை கட்டமைப்பு உருவாகும்போது இந்த நவீன வசதிகள் எல்லாம் ஒருங்கிணைக்கப்படலாம்.  

பயணியர் தகவல் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்ட மாநகரங்களின் பொதுப்போக்குவரத்தில் பயணிப்பவர் எண்ணிக்கையும், வருமானமும் உயர்ந்திருப்பதாக உலகவங்கி வெளியீடுகள் சொல்கின்றன. இதற்குப் பதிவுசெய்யப்பட்ட உதாரணங்கள் நியூயார்க்கும், சிக்காகோவும். லண்டன் போக்குவரத்து விசயத்தில், ஆபரேட்டர் வெளிப்படையான ஏபியைத் தருவதன் மூலம் செயலிகளை போட்டித்தன்மை அம்சம் கொண்டவைகளாக உருவாக்கி வைத்திருக்கிறார். இதனால் நுகர்வோர்க்குத் தோழமையான பல செயலிகள் உருவாகின; அவை மெட்ரோ (தரைக்கடியிலான) மற்றும் பேருந்துத் தரவுகளை ஒன்றுசேர்த்து தருகின்றன. சிங்கப்பூரிலும் நிஜநேரத்துப் பேருந்து வந்துசேரும் தரவுமையத்தை எல்லோருக்குமாக வடிவமைத்திருக்கிறது. அதனால் அதற்குள் செல்லும் வழிகள் நிறையவே இருக்கின்றன.

சென்னை எம்டிசியில் இருக்கும் இந்த நவீன அமைப்பு மாநிலத்தின் மற்ற போக்குவரத்துக் கழகங்களுக்கான அமைப்பிற்கு ஒரு முன்னோட்டமாக இருக்கிறது. இதை மெட்ரோ ரயில், புறநகர் ரயில் அட்டவணைகளோடு எளிதாக ஒன்றிணைக்க முடியும். அப்போதுதான் தொடர் பயணம், நிறைய வருமானம், உற்பத்தித் திறன் மேம்பாடு, பயணிகளுக்கான காலநேரம், பணம் மிச்சப்படுத்துதல் ஆகிய மாநில அரசின் இலட்சியம் நிறைவேறும். இப்போது ஒரு பயணி தன் அலைபேசியில் வெவ்வேறான செயலிகளை ஏராளமாக வைத்திருக்க வேண்டியிருக்கிறது. புறநகர் ரயில் பயணத்திற்கு யூடிஎஸ் செயலி; மெட்ரோவிற்கு ஒரு செயலி; எம்டிசிக்கு ஒரு செயலி.

மேலும் மின்னணு டிக்கெட் வசதி பேருந்துகளில் கிடையாது. என்றாலும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை கட்டமைப்பு உருவாகும்போது இந்த நவீன வசதிகள் எல்லாம் ஒருங்கிணைக்கப்படலாம்.


Share the Article

Read in : English