Read in : English

Share the Article

2006-11 காலகட்டத்து திமுக ஆட்சியில் ஏற்பட்ட மின்தடைகள் நிறைய பேருக்கு ஞாபகம் இருக்கும். அப்போதெல்லாம் 18 மணிநேர மின்தடைகள் அசாதாரணமல்ல. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த மின்தடைகள் அந்தப் பழைய ஞாபகங்களைக் கொண்டுவந்தன. இதற்குக் காரணங்கள் முன்செய்த செயல்களின் பின்விளைவுகள்தான்; ஆனால் மாநில அரசு ஒன்றிய அரசைக் குறை சொல்கிறது, காரணமே இல்லாமல்.

தமிழ்நாட்டு மின்துறையின் அடிப்படை அம்சங்கள், மாநில அரசின் 11 சதவீத வளர்ச்சிக் கனவுக்கும், 2013-க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற இலட்சியத்திற்கும் தோதுவாக இல்லை. வழிவழியாக வந்த பிரச்சினைகளை அரசு முதலில் எதிர்கொள்ள வேண்டும். அவை கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் லிமிடட் (டான்ஜெட்கோ) ஏற்கனவே ரூ.1.34 இலட்சம் கோடிக் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆந்திரப்பிரதேசத்தில் 1960-களில் காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்குத் தந்த இலவச மின்சாரத் திட்டத்தை தமிழக அரசு காப்பியடித்தது. தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம்தான் மின்திருட்டுக்கும், மின்சாரத் துஷ்பிரயோகத்திற்கும் ஆணிவேர். இப்போது ஆந்திரா அரசு தனது மின்சாரத் திட்டத்தைச் சீர்திருத்திக் கொண்டது. அங்கே வேளாண்மை மின்சாரம் இலவசம் என்றாலும், மீட்டர் பொருத்தி அது கண்காணிக்கப் படுகிறது. அதன்மூலம் மின்சாரத் திருட்டும், துஷ்பிரயோகமும் தடுக்கப் படுகின்றன. தொழில்களுக்குக் கொடுக்கப்படும் மானியங்களும் மின்சாரத்திற்கான நியாயவிலைகளைத் தடுக்கின்றன.

தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் லிமிடட் (டான்ஜெட்கோ)  ஏற்கனவே ரூ.1.34 இலட்சம் கோடிக் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.  ஆந்திரப்பிரதேசத்தில் 1960-களில் காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்குத் தந்த இலவச மின்சாரத் திட்டத்தை தமிழக அரசு காப்பியடித்தது. தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம்தான் மின்திருட்டுக்கும், மின்சாரத் துஷ்பிரயோகத்திற்கும் ஆணிவேர்.  இப்போது ஆந்திரா அரசு தனது மின்சாரத் திட்டத்தைச் சீர்திருத்திக் கொண்டது.

கார்பன் வெளிப்பாட்டை நீர்மின்சாரம் தடுக்கிறது என்பதால் உலகம் முழுவதும் நீர்மின்சாரத்தில் ஆர்வம் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள நீர்மின்சார நிலையங்களைச் சரியாகப் பேணாமல் வைத்திருப்பது கவலைக்குரிய விசயம். நிலக்கரி நிலையங்களிலிருந்து மின்சாரத்திற்கான நிலக்கரியை எடுப்பதில் இங்கே சில சுயநலக் கூட்டங்களுக்கு ஆர்வம் இருக்கிறது. நிலக்கரி எடுப்பதற்கு அதில் டெண்டர் முறை இருப்பது ஒரு காரணம்.

பின்பு வந்த தமிழக அரசுகள் மின்னுற்பத்தியில், வினியோகத்தில், குறைகளை சரிசெய்வதில் தைரியமான சீர்திருத்தங்கள் செய்யவில்லை. ஒவ்வொரு வருடமும், அரசு டான்ஜெட்கோவின் அதிக செலவீனங்களுக்கு ஈடுகொடுத்து அதைக் காப்பாற்றிவிடுகிறது. ஏனென்றால் வருமானத்தை விட டான்ஜெட்கோவிற்குக் கடன்கள் அதிகம்.

அதிதிறன் கொண்ட மீட்டர் சிஸ்டம், பூமிக்கடியில் கம்பிகளைப் போடுவது, மின்வினியோகத்தை நவீனப்படுத்தல் போன்ற தொழில்நுட்ப செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. தமிழ்நாடு பயோ-மாஸ் நிலையங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் அவை மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை.

2021-22-க்கான நீர்மின்னுற்பத்தி இலக்கை மத்திய மின்சார ஆணையம் விதித்திருக்கிறது. டான்ஜெட்கோ அந்த இலக்கைத் தாண்டியிருக்கிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் நான்கு அலகுகள் இயங்குவதில்லை. அவற்றிற்கு உயிர்கொடுக்க மாநில அரசு விரைந்துச் செயல்படவில்லை.

2014-க்கு முன்புவரை தெற்குக் கட்டமைப்பு (கிரிட்) தேசிய கட்டமைப்போடு இணைக்கப்படாமல் இருந்தது. அது இப்போது இணைக்கப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டிற்குப் பெரிதும் உதவியிருக்கிறது.

ஒன்றிய அரசிடமிருப்பது வெறும் 18 சதவீதம் மின்திறன்தான் என்ற போதிலும், தமிழக அரசு அதைக் குறைகூறுகிறது. மேலும் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரப் பற்றாக்குறைக்கு தமிழக அரசு ஒன்றிய அரசைக் குற்றம் சொல்கிறது.

மேலே சொன்ன காரணிகளின் விளைவால்தான் 2022 ஏப்ரல் மாதத்தில் மின்தடைகள் ஏற்பட்டன. ஒவ்வொரு காரணியும் அடுத்த காரணியில் தாக்கம் ஏற்படுத்தியது. கோடைக்காலங்களிலும் உஷ்ண அலைகளின் போதும் ஏற்படும் மின்சார உச்சத் தேவைகளைப் பூர்த்தி செய்ய திமுக அரசு சரியாகத் திட்டமிடவில்லை. டிசம்பரில் முடிந்திருக்க வேண்டிய நிலக்கரி டெண்டர் தாமதமானது. முதல் நிலக்கரி வரத்து இந்த மாதம்தான் நிகழ்கிறது. அதற்கான பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் மாநில அரசு ஒன்றிய அரசைக் குற்றம் சொல்கிறது.

மார்ச், 2022 நிலவரப்படி தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட மொத்த மின்திறன் 35,138.98 மெகாவாட். தேசிய திறனில் அது 9 சதவீதம். இதில் 62 சதவீத மின்சாரத்தைத் தனியார்த்துறை வழங்குகிறது. இதுவொரு அசாதாரணமான நிலைமை. ஏனெனில் தனியார்த்துறை மின்சாரப் பங்களிப்பின் தேசிய சராசரி அளவு 49 சதவீதம்தான். தமிழ்நாட்டிலிருந்து 20 சதவீதமும், ஒன்றிய அரசிலிருந்து 18 சதவீதமும் வருகின்றன.

தமிழகத்தில் நிறுவப்பட்ட மின்திறனில் 44 சதவீதம் அனல்மின் நிலையங்கள் வழங்குகின்றன. புதுப்பிக்கப்படும் எரிபொருள் திறன் 52 சதவீதம். இதில் தனியார்த்துறையின் பங்களிப்பு 98 சதவீதம்.

ஒன்றிய அரசிடமிருப்பது வெறும் 18 சதவீதம் மின்திறன்தான் என்ற போதிலும், தமிழக அரசு அதைக் குறைகூறுகிறது. மேலும் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரப் பற்றாக்குறைக்கு தமிழக அரசு ஒன்றிய அரசைக் குற்றம் சொல்கிறது.

இப்போது புதிய மின்நிலையங்கள் திட்டமிடப்படுகின்றன. பத்து வருடங்களுக்குள், நிறுவப்பட்ட மின்திறனை மேலும் 6,220 மெகாவாட் அளவுக்கு அதிகமாக்கும் இலக்கைக் கொண்டிருக்கின்றது அந்தத் திட்டம். இது சம்பந்தமான டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்; ஊழலுக்கு இடமளிக்கக்கூடாது. இவற்றிற்குத் தமிழக அரசுதான் பொறுப்பு.

இப்போது புதிய மின்நிலையங்கள் திட்டமிடப்படுகின்றன. பத்து வருடங்களுக்குள், நிறுவப்பட்ட மின்திறனை மேலும் 6,220 மெகாவாட் அளவுக்கு அதிகமாக்கும் இலக்கைக் கொண்டிருக்கின்றது அந்தத் திட்டம். இது சம்பந்தமான டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்; ஊழலுக்கு இடமளிக்கக்கூடாது. இவற்றிற்குத் தமிழக அரசுதான் பொறுப்பு.

சூரியவொளி மின்சாரத்திற்குத் தமிழ்நாட்டில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. ஆனால் தமிழக அரசிற்கு இதில் பெரிதாக ஆர்வம் இல்லை. தேசிய “பச்சை எரிபொருள் காரிடர்’ திட்டத்தைத் தமிழ்நாடு பயன்படுத்த வேண்டும். நிலக்கரி இறக்குமதிகளில் சுயநல ஆர்வம் கொண்ட கும்பல்களை தமிழக அரசு விலக்கிவிட்டு சூரியவொளி மின்சாரத்தை ஆதரிக்க வேண்டும்.

குஜராத் போன்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் மின்சாரத் திருட்டு அதிகம். இதுபோன்ற விரயச் செலவுகளைத் தவிர்க்க ஸ்மார்ட் மீட்டர் போன்ற தொழில்நுட்பத் தீர்வுகளைக் கொண்டு மின்துறையைத் திறமையுடன் கொண்டுசெல்லும் வழிகளை தமிழ்நாடு பின்பற்ற வேண்டும். அதற்கான நேரம் இதுதான். இல்லாவிடின் மின்தடைகள் மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தை நாசமாக்கிவிடும்.

(கட்டுரை ஆசிரியர் பொருளாதார அறிஞர் மற்றும் பொதுக்கொள்கை நிபுணர்.)


Share the Article

Read in : English