Read in : English

Share the Article

அகிம்சைப் போராட்டம் இலங்கையில் பலனளிக்க ஆரம்பித்துவிட்டது. இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்வதாக இன்று (09.05.22) அறிவித்திருக்கிறார். மகிந்த ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவிடம் ஒப்படைத்து விட்டதாக அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் நியூஸ்வயருக்குத் தெரிவித்தார்.

இன்று காலை ஆளும் கட்சியான இலங்கைப் பொதுஜன பெரமுனாவின்  (எஸ்எல்பிபி) ஆதரவாளர்கள் டெம்பிள் ட்ரீஸில் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்தபின்பு ஏற்படுத்திய கலகத்தைத் தொடர்ந்து இந்த  ராஜினாமா நிகழ்ந்திருக்கிறது.

டெம்பிள் ட்ரீஸுக்கு வெளியே எஸ்எல்பிபி ஆதரவாளர்கள் அரசுக்கெதிராக அமைதியாகப் போராட்டம் நடத்தும் கிளர்ச்சிக்காரகளைத் தாக்கினார்கள். பின்பு அவர்கள் கால்லே ஃபேஸ் கிரீனில் ‘கோத்தகோகாமா’ (கோத்த, கிராமத்திற்குப் போ) போராட்டக் களத்தில் புகுந்துப் போராளிளைத் தாக்கி போராட்டப் பொருட்களைத் துவம்சம் செய்தார்கள்.

இதனைத் தொடர்ந்து மக்கள், ஒரு பாவமும் செய்யாத அமைதியான புரட்சிக்காரகளின் மீது அரசு வன்முறையை ஏவிவிட்டதற்காக, ,  ஜனாதிபதியையும், பிரதமரையும் கடுமையாக விமர்சித்தனர். அரசுக்கெதிரான  போராட்டங்களுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. ஆகப்பெரும் போராட்டம் ஒன்று கால்லே ஃபேஸைச் சுற்றி நடந்து கொண்டிருக்கிறது.

“இராணுவத்தினரோடு ஒரு நல்லுறவைப் பேணி வளர்த்தெடுப்பது புரட்சிக்குத் தயார்செய்யும் பணியிலிருக்கும் ஓர் முழுமையான முன்னுரிமை.” என்று லியோன் ட்ராஸ்கி இயக்கமான ஃபோர்த் இண்டர்நேசனல் சொல்கிறது.

இந்த அகிம்சை எழுச்சிப்போர் இலங்கைக்கு அந்நியமானது. அந்த நாட்டிற்குத் தெரிந்ததெல்லாம் ரத்தக்களரியான ஆயுதப்போர்கள் மட்டுமே. படுபயங்கரமான யுத்தத்தை உருவாக்கிய, ஆட்சிக்கெதிரான இரண்டு கலகங்களை அந்நாடு சந்தித்திருக்கிறது – ஒன்று எழுபதுகளின் ஆரம்பத்தில்; மற்றொன்று எண்பதுகளின் இறுதிக்கட்டத்தில். அத்தோடு 30-வருட உள்நாட்டுப் போரும் நிகழ்ந்திருக்கிறது.

அதனால்தான் இன்று நாம் காணும் அகிம்சை எழுச்சிப்போர் பலருக்குப் புரியாத புதிராக ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேரத் தருகின்றது. இப்போது நடப்பதும் யுத்தம்தான்; ஆனால் இந்த யுத்தத்தில் கத்தியில்லை; ரத்தமில்லை; செத்துவிழும் உடல்கள் இல்லை.

நாட்டின்  பொருளாதாரத்தைச் சீரழித்தற்காக, பிரதமரும், ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே பல்வேறு கூக்குரல்கள் நாடெங்கும் ஒலித்தபோதும், மஹிந்த ராஜபக்சே பதவி விலக மறுத்துவிட்டார்.

ஜனாதிபதி பிரதமரைப் பதவிவிலகச் சொன்னார் என்று முன்பு செய்திகள் வந்தன. ஆனால் அவை பொய்யென்று சொல்லிய மகிந்த ராஜபக்ச பதவி விலகப் போவதில்லை என்று முரண்டு பிடித்தார். ஆளுங்கட்சியான எஸ்எஸ்எல்பியிலும் அணி உறுப்பினர்களிடமும் விவாதங்கள் நடந்தன. ஆனால் பிரதமர் பதவி விலகுவதாகத் தெரியவில்லை.

ஆனால் இன்று எஸ்எஸ்எல்பி ஆதரவாளர்கள் அரசுக்கெதிராக அமைதியாகப் போராட்டம் நடத்தும் கிளர்ச்சிக்காரர்களைத் தாக்கினார்கள். அதற்கு இப்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச விலைகொடுத்து விட்டார்.

அகிம்சையின் முன்பு வன்முறை தோற்றுப்போன இடம் இது. இலங்கையின் வரலாற்றில் ஓர் அமைதிப்போராட்டம் அமைதியாகக் காரியம் சாதிப்பது இதுதான் முதல்தடவை.

இந்த அகிம்சை எழுச்சியைக் கண்டு இலங்கைக் காவல்துறை வெலவெலத்துப் போயிருக்கிறது. பரிச்சயமில்லாத பாதையில் சென்று கொண்டிருப்பதுபோல ஓர் உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. வெறித்தனமான விருப்போடு துப்பாக்கி ஏந்திச் சுட்ட ஒரு போலீஸ்காரரால் ஏற்கனவே ஒரு போராளியின் உயிர் போய்விட்டது. அதனால் அவர்கள் சட்ட ஒழுங்கையும் காப்பாற்ற வேண்டும்; அதேசமயம் கோபமிக்க, ஆனால் இதுவரைக் கட்டுப்பாட்டோடு இருக்கிற கிளர்ச்சிக்காரர்களையும் எதிர்கொள்ள வேண்டும். இரண்டுக்கும் இடையில் இருப்பது ஒரு மெல்லிய கயிறு; அதில்மீதுதான் அவர்கள் சர்வஜாக்கிரதையாக நடக்க வேண்டியிருக்கிறது.

இலங்கையின் இந்த முதல் அகிம்சை எழுச்சிக்கு மூளைப்பலம் தந்தவர்கள் நிறைய ஆராய்ச்சி செய்துதான் இதை உருவாக்கியுள்ளார்கள் என்பது நிதர்சனம், இலங்கையின் கரைகளைத்  தாண்டியும் எதிரொலிக்கும் அளவுக்கு  தீவுமுழுக்கத் தீயாய்ப்பரவும் பெரும் எழுச்சிக்கு முழுமையானதொரு களம் அமைத்துக் கொடுத்தவர்கள் அவர்கள்தான்.

 இளைய தலைமுறைக் குழு ஒன்று ஒரு காவல்துறை அதிகாரியிடம், ”ஐயா, நீங்கள் எங்களுக்குத் தகப்பனார் போன்றவர்,” என்று சொல்லிவிட்டு, அவரின் குழந்தைகள் வயதுதான் தங்களுக்கும் இருக்கும் என்றும், ஒரு நல்ல விடியலுக்காகத்தான் தங்களைப் போன்ற இளைஞர்கள் போராடுகிறார்கள் என்றும் கூறினார்கள். தங்கள்மீது வன்முறையைப் பிரயோகிப்பதற்குப் பதிலாகத் தங்கள் இலட்சியத்திற்கு ஆதரவு தரும்படி அந்த இளையசமூகம் அவரை வேண்டிக்கேட்டதும் அந்த அதிகாரி மெய்சிலிர்த்துக் கண்கலங்கிப் போனார்.

அகிம்சைவழியிலான குடிமைச்சமூகப் போராட்டம் வன்முறைப் புரட்சிகளை விட மிகவும் பரவலான மாறுதலை உருவாக்கும் என்பது ஆராய்ச்சி காட்டும் ஆக்கப்பூர்வமான செய்தி. ஏனெனில் ஆயுதங்களை ஏந்த எண்ணம் இல்லாதவர்களும்கூட முன்வந்து அகிம்சைப்போரில் முன்களத்தில் நிற்பார்கள். அதனால்தான் இந்த அகிம்சைப் புரட்சியில் இதுவரை இல்லாத அளவில் பலதரப்பட்ட மக்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள். ஆயுதப்புரட்சியை விட நீண்டநாள் தாக்குப்பிடிக்கும் பலமும் அகிம்சைப் புரட்சிக்கு இருக்கிறது.

அகிம்சை எழுச்சி

கொழும்பில் கால்லே ஃபேஸ் கிரீனில் ‘கோத்தகோகாமா’ (கோத்த, கிராமத்திற்குப் போ) போராட்டக்களத்தில் நடந்த சிங்கள-தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டம். (Photo credit: Twitter handle @gobi243, Gobinath)

இலங்கையில் இப்போது நிகழும் அகிம்சை எழுச்சிப்போரின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இஜட் தலைமுறையினர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் போராளிக்கூட்டம் அரசுப் பாதுகாப்புப் படையினர்களைத் தங்கள் பக்கம் கொண்டுவர அவர்களுக்கு அன்புவலை வீசுகிறது என்பதுதான். உதாரணத்திற்கு, ஓர் இலங்கைச் சின்னப்பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு அன்போடு ரோஜாப்பூவைக் கொடுத்த சம்பவத்தைச் சொல்லலாம். அப்போது அந்த அதிகாரிகள் கட்டுக்காவல் கொண்ட பாராளுமன்றத்திற்கு இட்டுச்செல்லும் பாதையைத் தடுத்த தடுப்புகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

காவல்துறையினரின் ஆதரவையும், பாதுகாப்புப் படையினரின் ஆதரவையும் பெறுவதற்கு அவர்களை அன்போடும் மனிதநேயத்தோடும் நடத்துவது கிளர்ச்சிக்காரர்களுக்கு மிகவும் முக்கியம். ஏனென்றால் அதிகாரிகள்தானே ஒடுக்குமுறையின் இறுதி முகவர்கள்.

“இராணுவத்தினரோடு ஒரு நல்லுறவைப் பேணி வளர்த்தெடுப்பது புரட்சிக்குத் தயார்செய்யும் பணியிலிருக்கும் ஓர் முழுமையான முன்னுரிமை.” என்று லியோன் ட்ராஸ்கி இயக்கமான ஃபோர்த் இண்டர்நேசனல் சொல்கிறது.

இதைத்தான் பின்வரும் சம்பவம் விளக்குகிறது.

இளைய தலைமுறைக் குழு ஒன்று ஒரு காவல்துறை அதிகாரியிடம், ”ஐயா, நீங்கள் எங்களுக்குத் தகப்பனார் போன்றவர்,” என்று சொல்லிவிட்டு, அவரின் குழந்தைகள் வயதுதான் தங்களுக்கும் இருக்கும் என்றும், ஒரு நல்ல விடியலுக்காகத்தான் தங்களைப் போன்ற இளைஞர்கள் போராடுகிறார்கள் என்றும் கூறினார்கள். தங்கள்மீது வன்முறையைப் பிரயோகிப்பதற்குப் பதிலாகத் தங்கள் இலட்சியத்திற்கு ஆதரவு தரும்படி அந்த இளையசமூகம் அவரை வேண்டிக் கேட்டதும் அந்த அதிகாரி மெய்சிலிர்த்துக் கண்கலங்கிப் போனார்.

மற்றொரு சம்பவத்தில் ஒரு காவல்அதிகாரி தேசத்தைப் பிணித்திருக்கும் நாசகாரப் பிரச்சினைகள் பற்றிப் பேசி, குற்றம் செய்தவர்களை, அதாவது, ஜனாதிபதியை, பிரதமரை, அரசைப் பாதுகாக்க வேண்டாம் என்று தன் சகப்பணியாளர்களையும், முப்படையினரையும் வேண்டிக் கேட்டுக்கொண்டார். இந்தச் சம்பவம் போராளிகளை இன்னும் ஒருபடி மேலே கொண்டுசென்று  நிறுத்தியது.

இராணுவம், காவல்துறை ஆகியவைப்போக இன்னும் பிறர் இருந்தனர், போராளிகளின் இலட்சியத்திற்குள் இழுப்பதற்கு. தனியார் தொழிலதிபர்கள், புகழ்பெற்ற கலைஞர்கள், பொதுத்துறையினர், ஊடகத்தார்கள் – இவர்கள்தான் அவர்கள். இப்போது அவர்களும் அகிம்சைப் போராளிகள் பக்கம் மனிதநேயத்துடன் இழுக்கப்பட்டுவிட்டார்கள்.

ஏப்ரல் 28 அன்று இலட்சக்கணக்கான இலங்கைத் தொழிலாளிகள் நாடுதழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவும் மற்றும் அவரது குடும்பம் ஆட்சிசெய்யும் அரசும் பதவிவிலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துக் கூடிநின்றுக் கூவினர்.

வங்கிகள் மூடப்பட்டன; கடைகள் அடைக்கப்பட்டன; பொதுபோக்குவரத்து நின்றுபோனது. நாடுமுழுவதும் சுமார் 1,000 தொழிற்சங்கங்கள் பொதுத்துறை, மற்றும் தனியார்த்துறை தொழிலாளிகளுக்கு வேலைநிறுத்த அழைப்பு விடுத்திருந்தது. மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்தபின்பு, 2.2 கோடி மக்கள்தொகையைக் கொண்ட தேசத்தை ஏறத்தாழ முழுமையான முடக்கத்தில் தள்ளிய முதல் வேலைநிறுத்தம் இது.

இந்த 24-மணி நேர அடையாள வேலை நிறுத்தம் ஜனாதிபதியும் அரசும் உடனடியாகக் கீழிறங்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பலமாகவே பொதுவெளியில் எதிரொலித்தது. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச இதைச் செவிமடுக்காமல் இருந்தால், அவருக்கும் அவரது அரசிற்கும் ஓர் இறுதி எச்சரிக்கையாக மே 6 அன்று மிகப்பெரிய ஹர்த்தாலை நிகழ்த்தப்போவதாக வேலைநிறுத்தம் செய்த தொழிற்சங்கங்கள் அச்சுறுத்தியது; ஏப்ரல் 28-ஆம் தேதியிலான வேலைநிறுத்தம் பெற்ற வரலாறு காணாத வெற்றிதான் தொழிற்சங்கங்களை இப்படியோர் இறுதி எச்சரிக்கை மணியை அடிக்கவைத்தது. மே 6 அன்று ஹர்த்தால் நிகழ்ந்தும் விட்டது.

ஜனாதிபதியும், அரசும் பதவிவிலக வேண்டும் என்ற கோரிக்கையை மந்திரம்போல தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கும் கிளர்ச்சிக்காரர்கள் தற்போது கலைவடிவங்களையும் தங்களின் கலகத்தின் ஆயுதங்களாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

”கோத்தகோகாமா’ (கோத்த, கிராமத்திற்குப் போ என்று அர்த்தம்) என்ற முழக்கம் முழுக்க ஒலிக்கும் களத்தை கால்லே ஃபேஸ் கிரீன் என்ற இடத்தின் ஒருபகுதியில் போராளிகள் உருவாக்கினர். பின்பு இரண்டு வாரங்கள் கழித்து, மக்கள் திரண்டுவந்து கலை, இசை, ஆடல், பாடல் மூலம் ஜனாதிபதி மேலான தங்கள் கோபத்தை, விரக்தியை வெளிப்படுத்துவதற்குச் சரியான களமாக அது அமைந்தது. பின்னர் ”கோத்தகோகாமா’விற்கு நாடு முழுவதும் மட்டுமல்ல, புலம்பெயர்ந்த இலங்கை மக்கள் வசிக்கும் மற்ற ஜனநாயக நாடுகளிலும் கிளைகள் உண்டாயின.

கொழும்பில் நடந்த ”கோத்தகோகாமா’ கிளர்ச்சியில் போராளிகளுக்கு உணவும், நீரும் இலவசமாகக் கிடைக்கும்படி வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. நகரும் கழிப்பறைகளை அமைத்துக்கொண்டு முதல் நாளிலிருந்தே போராட்டக்களத்தை வீடாக நினைத்து அங்கேயே வசித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்தச் சத்யாகிரகப் போராளிகள். விரதமிருந்த இஸ்லாமியர்கள் ”கோத்தகோகாமா’ களத்தில் வெவ்வேறு இனங்களையும், வெவ்வேறு மதங்களையும் சார்ந்த சகப்போராளிகளோடு சேர்ந்து கொண்டு விரதத்தை முடித்துக்கொண்டனர்.

அரசு நிகழ்வுகளில் இலங்கையின் தேசியகீதத்தைத் தமிழில் பாட அதிகாரப்பூர்வமற்ற தடையை விதித்திருந்த ஆளும் ராஜபக்ச குடும்பத்தினரின் படங்கள் மீது போராளிகள் முட்டைகள் எறிந்து சிங்களத்திலும் தமிழிலும் தேசியகீதம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

வங்கிகள் மூடப்பட்டன; கடைகள் அடைக்கப்பட்டன; பொதுபோக்குவரத்து நின்றுபோனது. நாடுமுழுவதும் சுமார் 1,000 தொழிற்சங்கங்கள் பொதுத்துறை, மற்றும் தனியார்த்துறை தொழிலாளிகளுக்கு வேலைநிறுத்த அழைப்பு விடுத்திருந்தது. மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்தபின்பு, 2.2 கோடி மக்கள்தொகையைக் கொண்ட தேசத்தை ஏறத்தாழ முழுமையான முடக்கத்தில் தள்ளிய முதல் வேலைநிறுத்தம் இது.

பல்வேறு போராட்டக் களங்களில் தொழில்முறை நடனக்கலைஞர்களும், தபேலா கலைஞர்களும், இசை விற்பன்னர்களும் ஒன்றுசேர்ந்து சிங்கள மரபுக்குரிய பேய்விரட்டும் சடங்கை நிகழ்த்துகிறார்கள். 18 வகையான நடனங்களைக் கொண்ட அந்தச் சடங்கிற்கு ’18 சான்னியா’ (நோய்) என்று பெயர். ஒவ்வொரு நடனமும் மனித உடலைத் தாக்கும் ஒவ்வொரு நோயையும் வர்ணிக்கிறது. இந்தத் தடவை இந்தச் சடங்கு நிகழ்த்தப்படுவதற்குக் காரணம் ஒரு நோயாளியை வைத்தியம் செய்து காப்பாற்ற வேண்டிய கடமை. நோயாளி வேறு யாருமல்ல; இலங்கைத் தாய்தான்.

”கோத்தகோகாமா’வில் கலை ஓர் அதிமுக்கிய காரணி. கிண்டல் தொனிக்கும் இசை, கவிதை, கலைப்படைப்புகள் ஆகியவற்றோடு சுவர்ச்சித்திரங்களும் பெருமைமிக்கதோர் இடத்தைப் பிடித்திருக்கின்றன. இந்த ஆட்சியில்  நிகழ்ந்த சுற்றுப்புறச்சூழல் அழிவை வர்ணிக்கும் அந்தச் சுவர்ச்சித்திரங்கள், மகிந்த ராஜபக்சவின் ராஜ்யத்தில் ’காணாமல்’ போன மற்றும் கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள், இன்னும் பிற கொலைகளுக்குப் பலியானவர்கள் ஆகியோர் முகங்களையும் காண்பிக்கின்றன.

பார்ப்பதற்குக் களைத்துப் போனவர்களாகத் தெரிகிறார்கள் அந்த அகிம்சைப் போராளிகள். ஆனால் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, விடமாட்டோம் என்கிறார்கள் அவர்கள். வெற்றியை நோக்கி இப்போது ஒரு பெரிய அடியை எடுத்து வைத்துவிட்டார்கள். ஆனால் முழுமையான வெற்றிதான் அவர்கள் இலக்கு.

முகத்தில் தெரியும் களைப்பு குரலில் வைராக்கியமாக நிறம்மாறுகிறது: அவர்களின் ஒருமித்தப் பெருமிதக் குரல் இப்படித்தான் ஒலிக்கிறது:

”நாங்கள் வீட்டுக்குப் போகமாட்டோம், அவர்கள் (எல்லோரும்) வீட்டுக்குப் போகும்வரை.”


Share the Article

Read in : English