Read in : English

Share the Article

தமிழ் நாடு அரசியலில் சனிக்கிழமையன்று வழக்கத்திற்கு மாறான காட்சி ஒன்று இருந்தது. விஜயகாந்த் செய்தியில் இருந்தார், அன்று அவரது பிறந்த நாள், ஆனால் அது பகடி செய்பவர்களின் கவனத்தை அன்று ஏனோ திருப்பவில்லை. அவர்  உடல் நலம் குன்றி வருவதால் அவருக்கு ஒரு தற்காலிக இடைவேளை கொடுத்திருப்பதாக தோன்றியது. அவரைப்பற்றி போதுமான பகடிகள் இருந்ததால், இம்முறை அவரை நிம்மதியாக இருக்க விடுவதாகவே தோன்றியது.

விஜயகாந்த் தமிழ் நாடு அரசியலில் பல வழிகளில் தனித்து நிற்கிறார். அவரது கட்சிக்கு எந்த கருத்தியலோடும் பிணக்குகள் கிடையாது. அவர் தனக்கு எந்த கருத்தியல் கொள்கைகள் கிடையாது எனவும், மேலும் திராவிடத்தோடு அல்லது அதன் இயக்கத்தோடு சிறிது தொடர்பைக் கொண்டிருப்பதாகவும் கோருகிறார். அவரது கட்சிப் பெயர்  திராவிட குறிப்பினை எடுத்துச் செல்கிறது, இருப்பினும் அந்த கருத்தியலைத் தகர்க்கும் விதமாக “தேசியம்” என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளது. முரணாக, தேமுதிக சில முறையீடுகளை எடுத்துச் சென்றது, அது பலருக்கான ஒரு மாற்றம். அது கேப்டனின் கவர்ச்சியை அடிப்டையாகக் கொண்டது, ஆனால் அது யாரையும் மாற்றவில்லை. அது எந்த தனிப்பட்ட துறையையோ அல்லது இன அடையாளத்திற்காகவோ முறையிடவில்லை. அது அனைவருக்காகவும் பேசிய, மாற்றாக இருந்தது. பல தலித் வாக்காளர்களின் பாசத்தைக் கூடப் பெற்றது.

விஜயகாந்த் ஒவ்வொருவரையும் மரியாதையாக நடத்தியத்தின் மூலமாகவும், உடன் வேலைபார்ப்பவர்களுக்கான இடத்தை அளித்ததின் வாயிலாகவும், புதிய இயக்குனர்கள் மற்றும் திரைத்துறை மாணவர்களை ஊக்குவித்ததின் காரணமாகவும், திரைப்பட துறையில் மரியாதைக்குரியவராக திகழ்ந்தார். அவர் கருப்பு எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்பட்டார்.

2011 இல் தேர்தலின் உச்சத்திற்கு பிறகு அவர் பிரபலமடைந்தவர்களின் தரவரிசை பட்டியலில் வீழ்ச்சியடைந்தார்.

2000 களில் தேமுதிக தனது தடத்தை பதித்து,  கணிசமான வாக்காளர்களை ஈர்த்தது. குறிப்பாக அதிமுக மீது அதிருப்தியாக இருந்த வாக்காளர்கள் தேமுதிகவை ஆதரித்தனர். கட்சி ஒருமுறை தனது தடத்தை பதித்தவுடன், சிறிய கட்சிகள் தமிழ் நாட்டில் முகம் கொடுக்க முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக மாறிப்போகிறது. அவர்கள் தங்களது இருப்பை உறுதி செய்தவுடன், ஏதாவது ஒரு கழகத்துடன் இணைய வேண்டுமா அல்லது தனி பெரும்பான்மையாக இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டியுள்ளது. கடந்த கால பிந்தைய அமைப்பில்,  தனிப்பெரும்பான்மை  என்பது அர்த்தமாக  இருக்கலாம் மற்றும் நிறைய கட்சிகள் தேர்தல் சுழற்சி முறை  போன்ற ஒரு வாய்ப்பை ஆதரிக்க முடியும். கழக கட்சிகளுடன் இணைவதென்பது திறமையாக நகர்த்தவேண்டிய அபாயம்.  அவர் ஜெயலலிதாவின் தலைமை குறித்து பொதுவாகவே அச்சம்கொள்ளவில்லை, ஆனாலும் 2011 இல் இணைந்து செயல்பட்டார். இது சட்டசபையில் அவரை எதிர்க்கட்சித் தலைவராக  உருவாக்கியது, ஆனால் அவரது தேர்தல் நிலைப்பாடு பிரதானமாக அதிமுக  விற்க்கு மாற்றாக இருப்பதால் நம்பகத்தன்மையை இழந்தார்.

2011 இல் தேர்தலின் உச்சத்திற்கு பிறகு அவர் பிரபலமடைந்தவர்களின் தரவரிசை பட்டியலில் வீழ்ச்சியடைந்தார். ஆரோக்கியமற்ற உடல்நிலை அவரை பின் தொடர்ந்தது.

தேசிய அளவில், மோடியின் இணையப்பிரச்சாரம் நன்மையைக் கண்டது –  அது போலி செய்தி, பகடி  மற்றும் அசிங்கமான தந்திரங்களின் கலவையாக இருந்தது. தமிழ்நாட்டில் விஜயகாந்த்             என்ன நிகழ்கிறதென்பதே அறியாது இருந்தார். அவர் தனக்கு என்ன நேர போகிறது என்பதை உணரும் முன்பே, முதலமைச்சர் பதவிக்கு ஒரு தீவிர போட்டியாளரின் எண்ணிக்கையைக்   கடுமையான மீம்கள் மூலமாக குறைத்தனர்.

விஜயகாந்த் பகடி செய்பவர்களுக்கு பிடித்தமானவராக இருந்தார். அவரது ஆர்பரிப்புகள் பகடி செய்து மகிழப்பட்டது. அவரது இயல்பான, உரையாடல் பாணியிலான சொற்பொழிவுகள் கேலி செய்யப்பட்டது. இணையத்தில் இவ்வகையிலான மக்களே இலக்காக இருந்தனர். இவ்வாறு தான் ராகுல் காந்தியின் தலைமை தகுதி கடுமையாகத் தாக்கப்பட்டது. பின்பு விஜயகாந்தும் இலக்கனார்.

அரசியல் கட்சிகளின் ஆன்லைன் நடவடிக்கைள், தங்களது பங்களிப்பை மீம் மூலம் பகிர்ந்தார். அவர்கள் அவரை வறுத்தெடுக்க அவரது திரைப்படங்களை பார்த்து அவரின் நடவடிக்கையை கவனித்து, பங்களிக்க அர்ப்பணிப்புள்ள குழுவினை கொண்டிருந்தனர். தடுமாற்றமான நிலையில், ஆனால் அவரது மனநிலையை பிரதிபலிக்கும் வாட்ஸ்சப் காணொளி வைரலானது. சில நேரங்களில் அவரது தடுமாற்றமான பேச்சு, நோயின் விளைவாக ஏற்பட்டது , குடிபோதையில் முட்டாள் தனமாக உளறியதாக அறியப்பட்டது.

அவரது தலைமை பண்பு மற்றும் நம்பகத்தன்மை ஒரு முறை சந்தேகத்துக்குரியதாக மாறிய போதும், மூன்றாவது முன்னணி கட்சியாக செதுக்கி கொள்ள முனைந்தது ஒரு துணிச்சலான முயற்சியே. அவரது முயற்சிகள் கழக கட்சிகளின் ஓட்டுக்களை பிரிப்பதற்கான  சூழ்ச்சி என்று சித்தரிக்கப்பட்டது.

இன்று விஜயகாந்த் என்பவர் தன்னுடைய முந்தைய காலங்களின் நிழலே. அவரது மோசமான உடல் நிலை துயரமான அரசியல் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் பிரச்சாரத்தின் மூலம் அவர் கீழே கொண்டு வரப்பட்டார். இணையம் அரசியலில் மோசமான கூர்வாளாக சேர்க்கப்பட்டுள்ளது. அவரது தொழில் வாழ்க்கையை மீட்டெடுத்து, மீண்டும் எழுப்புவது  என்பது அவருக்கு அசாதாரமாண பணியாயிருக்கும்.


Share the Article

Read in : English