English தமிழ்

எங்களை பற்றி

உலகெங்கும் வாழும் தமிழர்களின் இணைய வழி சமூக நடுவமாக “இன்மதி” (www.inmathi.com) திகழ்கிறது.

மக்கள் தொகையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ள தமிழ்ச்சமூகத்தில் இளையோர்
கள் ஏராளம் உள்ளனர். அவர்கள் தம்மினத்தின் வரலாறு, பண்பாடு , கலை மற்றும் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளதோடு மாற்றத்தையும் எதிர்நோக்கியுள்ளனர்.

இன்று தமிழக அரசியல் வியக்கத்தக்க மாற்றங்களுக்கு ஆளாகியுள்ளது.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வேளையில் “இன்மதி” தமிழ்ச்சமூகத்திற்கான தகவல் பரிமாற்ற சேவையில் முதன்மைப்பங்காற்ற விழைகிறது.ஊடகத்தின் உண்மையான, தேவையான செயல்பாட்டை நிறைவாகச்செய்து,தமிழ்ச்சமூகத்தை ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளச் செய்யும் தளமாகச்செயல்படுவதே இன்மதியின் நோக்கமாகும்.

இன்மதியின் குறிப்பான ஊடகவியல் ஆணித்தரமாக நம்பகத்தன்மையுடன் ஆழமானதாக இருக்கும். உண்மையை உரத்துச்சொல்வதிலும் நல்ல நோக்கத்திலும் எத்தகைய சமரசமும் இருக்காது. எமது அலுவல்களை எத்தகைய பக்கச்சார்பு நலன்களும் வழிநடத்தாது.ஆசிரியரின் முடிவுகள் அனைத்தும் முற்றும் முழுக்க ஊடகத்தரத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்கும் .

“இன்மதி” உலகெங்குமுள்ள தமிழர்களின் தனித்த அடையாளத்தை உறுதிப்படுத்துகிறது. அதோடு சுதந்திரம் , பன்மைத்துவம், அமைதி, குறுங்குழுவாதமற்ற தன்மை போன்ற மதிப்பீடுகளைஅடிப்படையாகக் கொண்ட சமூகத்திற்காகவும் “இன்மதி” செயலாற்றுகிறது.

பல வகையான ஊடகத் தொடர்புகளையும், உரையாடல்களையும் அனுமதிக்கும் இணைய உலகின் முழுத்திறனையும் கிரகித்துக்கொள்ள, இன்மதி திட்டமிட்டுள்ளது. தொழில் முறை பத்திரிக்கையாளர்களால் தயாரிக்கப்படும் அறிக்கை மற்றும் கருத்து சார் ஊடக முறையையும் (கதீட்ரல்), வாசகர்களின் உள்ளடக்கம் கொண்ட பங்கேற்பு முறையையும் (பஜார்),இணைத்திட “இன்மதி” எத்தனிக்கிறது.

இணைய உலகம் அனுமதிக்கும் பல்வகைப்பட்ட ஊடகங்கள் மற்றும் தொடர்புப்பரிமாற்றங்களை முழுமையாகச் சாத்தியமாக்கி வழங்கிட “இன்மதி” திட்டமிடுகிறது. தகவல் காப்பாளராக இருக்கும் மரபுவழிப்பட்ட ஊடகச்செயல்பாடு இன்றைய எண்முறை(டிஜிட்டல்)உலகிற்கு முழுக்கப்பொருந்தாது என்பதை “இன்மதி” புரிந்து கொள்கிறது.