தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஜீப் மற்றும் ஒரு வேன் முகப்பு கண்ணாடி மர்ம நபர்களால் கல்லால் உடைக்கப்பட்டு சேதபடுத்தப்பட்டுள்ளது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய பாஸ்கரன் நேற்றுடன் ஓய்வு பெற்றார். அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு பல்கலைக்கழக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஜீப்புகள் ஒரு வேன் கண்ணாடிகள் மர்ம நபர்கள் சிலரால் உடைக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.