எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு உத்தரவின்படி ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதன்படி கடந்த மாதம் 25-ம் தேதி முதற்கட்டமாக 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று வேலூர் மத்திய சிறையில் இருந்து 24 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.