முல்லைப் பெரியாறு அணையில் எட்டு மாதங்களுக்கு பின் மூவர் கண்காணிப்பு குழு இன்று ஆய்வு செய்கிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் இன்று ஆய்வு நடைபெறுகிறது. மூவர் கண்காணிப்பு குழுவின் தலைவரும், மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளருமான குல்சன்ராஜ் தலைமையில் ஆய்வு நடைபெற உள்ளது. அணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவது ஆகியவை தொடர்பாக ஆய்வு நடத்தப்பட உள்ளது.