மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 13,278 கனஅடியில் இருந்து 16,605 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு 18,267 கனஅடியில் இருந்து 18,133 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 119.61 அடியாகவும், நீர்இருப்பு 92.65 டிஎம்சி.,யாகவும் உள்ளது. கால்வாய் பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு 500 கனஅடியில் இருந்து 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 21,000 கனஅடியில் இருந்து 19,000 கனஅடியாக குறைந்துள்ளது. அருவியில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் 26 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.