கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த புதுக்குப்பத்தில், அனல் மின் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு கொண்டுவரப்படும் நிலக்கரியால், அப்பகுதியில் உள்ள குடி நீர் மாசுபாடு முதல், பள்ளிக் குழந்தைகளின் உடைகளில் கரி படிதல், உணவுகளில் கரி படிதல் என பல்வேறு வகையிலான மாசுகளை அப்பகுதி மீனவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இதற்கு தீர்வு காண வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், இப்போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாக போராட்டக் குழுவினர் கூறுகின்றனர்.