அந்தமானிலிருந்து சென்னைக்கு ஸ்வராஜ் சிங் என்ற பயணிகள் கப்பல் 257 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது, நிக்கோபர் தீவை தாண்டி வந்து கொண்டிருந்த போது சென்னையிலிருந்து 200 நாட்டிகல் மைல் தொலைவில் திடீரென கப்பல் பாறையில் மோதியது. இதனால்,கப்பலில் வெள்ளம் ஏறவே, பயணிகள் அலறத் துவங்கினர்.
இதனிடையே, கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் விரைந்து வந்து விசைப்படகுகளில் பயணிகளில் அனைவரையும் காப்பாற்றினர். இச்சம்பவம் குறித்து சென்னை துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.