சுருக்குமடி பயன்படுத்திய மரக்காணம் மீனவர்களுக்கு பழவேற்காடு மீனவர்கள் எதிர்ப்பு

Forums Communities Fishermen சுருக்குமடி பயன்படுத்திய மரக்காணம் மீனவர்களுக்கு பழவேற்காடு மீனவர்கள் எதிர்ப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #9935
    Inmathi Staff
    Moderator

    திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்திய மரக்காணம் மீனவர்களுக்கு பழவேற்காடு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

     

    கடந்த சில காலமாக பழவேற்காடு மீனவர்களுக்கு மீன் கிடைப்பது பெரிய அளவில் இல்லாமலிருந்தது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக பழவேற்காடு கடலில் 2 கிலோ முதல் 10 கிலோ வரையுள்ள மீன்கள் மீனவர்களின் வலையில் சிக்கியது.

    இதனிடையே, பழவேற்காடு கடலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை பயன்படுத்தி விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பெரிய படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    இதனை பார்த்த பழவேற்காடு மீனவர்கள் அங்கு சென்று அவர்களிடம் கேட்ட போது தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதையடுத்து 7 படகுகளில் மரக்காணம் மீனவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். ஒரு படகில் இருந்த மீன்களை பழவேற்காடு மீனவர்கள் கைப்பற்றி படகுடன் கரைக்கு கொண்டு வந்தனர்.

    விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் பழவேற்காடு கடலில் சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழவேற்காடு மினவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பழவேற்காடு பகுதியில் உள்ள 20 மீனவ கிராமங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகிறது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This