வீட்டிலேயே சுகபிரசவத்திற்கு பயிற்சி அளிக்கப்போவதாக விளம்பரம் செய்ததால் கோவையில் கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஹீலர் பாஸ்கர் சுகபிரசவம் குறித்து நீண்ட காலமாக சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரசாரம் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனவே இவரது நிகழ்ச்சிகளால் யாரும் பாதிக்கப்பட்டு உள்ளனரா? என்றும், திருப்பூரில் வீட்டில் பிரசவம் பார்த்ததால் கடந்த 22-ம் ஆசிரியர் கிருத்திகா உயிரிழந்ததற்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கோவை அடுத்த கோவை புதூரில் நிஷ்டை சர்வதேச வாழ்வியல் தனியார் அமைப்பு சார்பில் இனிய சுகபிரசவம் ஒரு வரம் என்ற பெயரில் 26-ம் தேதி பயிற்சி வகுப்பு நடத்தப்போவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் ஹீலர் பாஸ்கர் மற்றும் அந்த அமைப்பின் மேலாளர், சீனிவாசனை நேற்று கைது செய்தனர்.