காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் உற்சவர் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் மோசடி செய்தது தொடர்பாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சிலை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவிற்கு எதிரான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை கவிதாவுக்கு எதிரான ஆவணங்களை தாக்கல் செய்ய ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா ஜாமீன் மனு மீதான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை கைது செய்தது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கவிதாவுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்காமல் நேரடியாக கைது செய்தது ஏன் என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கூடுதல் ஆணையர் கவிதா முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் இருப்பதாக பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளார். கவிதாவுக்கு எதிரான ஆதாரத்தை வரும் திங்கட்கிழமை காட்ட ஐ.ஜி.க்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தகுந்த ஆதாரம் இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐஜிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.