2019 நாடாளுமன்ற தேர்தலில் ஒப்புகைச் சீட்டு முறை : தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

Forums Inmathi News 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஒப்புகைச் சீட்டு முறை : தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #9928
    Kalyanaraman M
    Keymaster

    2019 நாடாளுமன்ற தேர்தலில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான ஒப்புகைச் சீட்டு முறை முழுமையாக பின்பற்றப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் பணிகளின் தொடக்கமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் குறித்த முதல் நிலை பயிலரங்கு ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் நடைபெற்று வருகிறது.

    மாவட்ட தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்கள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர். தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில், தேர்தல் ஆணையத்தின் சார்பு செயலாளர் சௌமியாஜித் கோஷ் மேற்பார்வையில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. ஒப்புகை சீட்டு இல்லாததால் யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்து வாக்காளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நீடித்து வந்தது. இதனை அடுத்து வரும் தேர்தலில் ஓட்டுபதிவின் போது ஒப்புகை சீட்டு வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This