வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. டந்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அதிகமாக மதுரையில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனாலும், வெப்பசலம் காரணமாகவும் 2 நாட்களுக்கு தமிழகம் புதுவை ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறினார்.