சிலை கடத்தல் விவகாரம், சர்வதேச அளவில் இருப்பதால் தான் விசாரணையை சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில் உள்நோக்கம் இல்லை. குற்றத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதனிடையே, சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் முறையிட்டார். இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.