தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான முதல் வழக்கை தவிர, மற்ற வழக்குகளை ரத்து செய்வதாக ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்ய்பட்டன. இந்நிலையில் வின்சென்ட் என்ற வழக்கறிஞர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கிலேயே ஊர்வலம், கல்வீச்சு, கலெக்டர் அலுவலகத்தில் வன்முறை என அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால், ஒவ்வொரு சம்பவத்திற்கும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தது ஏற்புடையது கிடையாது. இதனை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறினார்.
இதனை விசாரித்த நீதிபதிகள், மே22 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கை தவிர மற்ற வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.