திருபரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே. போசுக்கு, நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது, வழியிலேயே உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில, மதுரை ஜீவா நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது.