இலங்கையிலிருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 11.5 கிலோ தங்கத்தை ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர். சென்னைக்கு பஸ் மூலம் கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து அங்கு சென்ற அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு ரூ.2.60 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.