வணிக வரித்துறையில் 4 இணை ஆணையர்கள், 43 துணை ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நெல்லை இணை ஆணையர் சுஷில் குமார், இணை ஆணையர் ( சென்னை மத்திய கோட்டம்), மதுரை இணை ஆணையர் சரஸ்வதி, சென்னை தெற்கு கோட்டம், சென்னை தெற்கு இணை ஆணையர் சவுந்திரராஜன் விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய இணை ஆணையர், பத்மாவதி மதுரை சட்ட குழு இணை ஆணையர், சேலம் அமலாக்கப்பிரிவு இணை ஆணையர், விஸ்வநாதன் மதுரை வணிக வரித்துறை இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 43 துணை ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.