5 ரூபாய் செலவில் இனி மீன்களில் வேதிப்பொருள் இருக்கிறதா என்பதை அறியலாம்

Forums Communities Fishermen 5 ரூபாய் செலவில் இனி மீன்களில் வேதிப்பொருள் இருக்கிறதா என்பதை அறியலாம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #9859
    Inmathi Staff
    Moderator

    மீன்களில் பார்மாலின் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய இனி ரூ.5 மட்டும் செலவு செய்தால் போதும். இதற்கான கிட் ஒன்றை கொச்சியில் உள்ள மத்திய மீன் தொழில் நுட்ப கல்வி நிறுவன விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

    இதுகுறித்து அந்நிறுவனத்தின் விஞ்ஞானி டாக்டர்.டி.அசோக் குமார் கூறுகையில், இதுவரை ஆய்வு நிலையில் இந்த கிட் இருந்து வந்தது. அதனைக் கொண்டு குஜராத் மாநிலத்தில் சூரத், அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. அவைகளில் எவ்வித கலப்படமும் சேர்க்கப்படவில்லை.

    இனி இதனை மும்பையை சேர்ந்த ஹைமீடியா என்ற நிறுவனம் சந்தைக்கு கொண்டுவர ஒப்பந்தம் செய்துள்ளது. முதல்கட்டமாக 25 கிட்டுகள் கொண்ட ஒரு பேக்கானது தலா ரூ.10 வீதம் மொத்தம் 250 ரூபாய்க்கு விற்கப்படும். அடுத்தடுத்து வரும் நாட்களில் அது ரூ. 5 க்கு குறைந்த விலையில் விற்கப்படும் என தெரிவித்தார்.

    மீன்களில் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதை கண்டறிய குறைந்த செலவில் சர்வ சாதாரணமாக கண்டறிய CIFT யினர் வழி ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம் சாதாரண மக்கள் மீன்களை பரிசோதித்து தைரியமாக வாங்க முடியும் என தேசிய மீனவர் பேரவை தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ இளங்கோ கூறியுள்ளார்.

    • This topic was modified 2 years, 10 months ago by Inmathi Staff.
Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This