குமரி மாவட்டத்தில் கணவாய் மீன் பிடிக்க கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
குமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கணவாய் மீன் சீசன் ஆகும். இக்காலத்தில் , விசைப்படகுகள் 25 கடல் பாகத்திற்கு மேற்பட்ட பகுதியில் தான் மீன் பிடிக்க வேண்டும். நாட்டுப்படகுகள் கூட்டமாக மீன் பிடிக்கும் இடங்களில் விசைப்படகுகள் மீன் பிடிக்க வரக்கூடாது. ஞயிற்றுகிழமைகளில் 10 நாட்டிகல் தொலைவிற்குள் மீன் பிடிக்க வரக்கூடாது. கணவாய் மீன் பிடிக்கும் காலக்கட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்களுடன் சுமூகமாக குறிப்பிட்ட வரையறையின்படி விசைப்படகுகள் மீன் பிடிக்க வேண்டும்.
இந்த கட்டுப்பாட்டுகளை மீறும் படகுகள் மீது தொழில் முடக்கம் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என அச்செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது