தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் தென் சென்னை மாவட்ட ஆண்டு பேரவைக்கூட்டம் செவ்வாயன்று (ஆக.31) நொச்சிக்குப்பத்தில் நடைபெற்றது.
கடலோர மக்களுக்கும், குடியிருப்புகளுக்கும் பேராபத்தை ஏற்படுத்துவதோடு, மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் ‘வரைவு கடற் கரை மேலாண்மை திட்ட அறிவிப்பாணை – 2018’ஐ திரும்ப பெற வேண்டும்.
நொச்சிக்குப்பம் மீன்மார்க்கெட்டை அதே இடத்தில் நவீன முறையில் தமிழக அரசு கட்டிக் கொடுக்க வேண்டும், சிந்தாதரிப்பேட்டை மீன்மார்க்கெட் டில் காலங்காலமாக மீன் வியாபாரம் செய்வோர் மற்றும் மீன் வெட்டுவோரை பாதுகாக்க வேண்டும்,
பெசன்ட்நகர் ஓடைக்குப் பத்தில் மீன்மார்க்கெட் அமைக்க வேண்டும், மீன் வியாபாரம் செய்யும் பெண்கள், மீன்வெட்டுவோரை நலவாரியத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எஸ்.ஜெயசங்கரன் தலைமையில் நடைபெற்ற இப்பேரவையில், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் ஐ.ஆர்.ரவி மற்றும் எஸ்.பி.சிவா, ஜெ.அன்புரோஸ் உள்ளிட்டோர் பேசினர்.
தென்சென்னை மாவட்ட புதிய நிர்வாகிகள்: மாவட்டத் தலைவராக ஜெ.அன்புரோஸ், செயலாளராக எஸ்.ஜெயசங்கரன், பொருளாளராக சி.பரமமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.