மாதவபுரம் மீன் வளக்கல்லூரியில் உணவு தொழில் நுட்பத்தில் பி.டெக் படிப்பு.

Forums Communities Fishermen மாதவபுரம் மீன் வளக்கல்லூரியில் உணவு தொழில் நுட்பத்தில் பி.டெக் படிப்பு.

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #9803
    Inmathi Staff
    Moderator

    தமிழ் நாடு டாக்டர் ஜெயலலிதா மீன் வள பல்கலைகழகத்தின் கீழ் புதிதாக  நிறுவப்பட்டுள்ள கல்லூரியில் உணவு தொழில் நுட்பவியல் படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பல்கலைகழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாதவபுரத்தில் புதிதாக மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவுத் தொழில் நுட்ப கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் இந்த ஆண்டு முதல் துவங்கப்படும் பி.டெக் (உணவு தொழில் நுட்பவியல்)படிப்பு டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் பாடத்திட்டப்படி பயிற்றுவிக்கப்பட உள்ளது.

    இந்த பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க  12 ஆம் வகுப்பில் கணிதம்,இயற்பியல்,வேதியியல் மற்றும் உயிரியல்/ கணினி அறிவியல் பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.tnjfu.ac.in என்ற பல்கலைகழக இணையதளத்தில் விண்னப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 4 ஆம் தேதி கடைசி நாளாகும். கலந்தாய்வு ஆகஸ்ட் 2 வது வாரத்தில் நடைபெறும் என அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This