அரபிக்கடலில் மீன் பிடித்தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மீனவர்கள் இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். பொதுவாக, தமிழகத்தின் குளச்சல் முதல் குஜராத்தின் கட்ச் வரையுள்ள மேற்கு கடல் பகுதியில் மீன் பிடித் தடைக்காலம் மேய் மாதம் 1 ஆம் தியதி முதல் ஜூலை 31 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மீன் பிடித் தடைக்காலம் நேற்றுடன் முடிவடந்த நிலையில் மீனவர்கள் இன்று அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். பொதுவாக, இந்த தடைக்காலத்தில், விசைப்படகு மீனவர்கள் மட்டுமே மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர்.சிறு கட்டுமர மீனவர்கள் தடைக்காலத்திலும் கடலுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.