2010-ம் ஆண்டு முதல் இதுவரை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 5 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. சிங்காரவேலு ஆணையத்திற்கு இதுவரை ரூ.2.6 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ராஜேஸ்வரன் ஆணையத்திற்கு ரூ.1.47 கோடியும், ஆறுமுகசாமி ஆணயைத்திற்கு ரூ.32 லட்சமும், அருணா ஜெகதீசன் கமிஷனுக்கு ரூ.27 லட்சம் செலவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரகுபதி கமிஷனுக்கு இதுவரை ரூ.4 கோடி செலவு செய்துள்ளதாகவும், 3 ஆண்டுகளில் ரூ.2 கோடி செலவு செய்துள்ளதாகவும் தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விசாரணை ஆணையங்கள்
1. இளவரசன் மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம்.
2. ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் ஆணையம்.
3. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்.
4. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி விசாரிக்க அருணா ஜெகதீசன் ஆணையம்.
5. புதிய தலைமை செயலக விவகாரத்தை விசாரிக்க நீதிபதி ரகுபதி கமிஷன்.