ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமின் கேட்டு டில்லி ஐகோர்ட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில், அவரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை செப்., 28 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.