ஈரானில் 21 தமிழக மீனவர்கள் மீட்பு

Forums Communities Fishermen ஈரானில் 21 தமிழக மீனவர்கள் மீட்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #9788
  Kalyanaraman M
  Keymaster

  கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 21 பேர், ஈரானுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆனால், படகு உரிமையாளர் ஊழியர்களுக்கு போதிய சம்பளம் வழங்கவில்லை என புகார் கூறப்பட்டது. உணவில்லாமல் தவித்து வருவதாக அவர்கள் , தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஈரானில் உள்ள மீனவர்களை மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

  இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா டுவிட்டரில் கூறியுள்ளதாவது: ஈரானின் நகிடகியில் தவித்து வந்த தமிழக மீனவர்கள் 21 பேர், இந்திய தூதரகம் மற்றும் தூதரின் முயற்சியால் மீட்கப்பட்டனர். 3 ம் தேதி முதல், குழு குழுவாக அவர்கள் சென்னை திரும்புவார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This