4வது நாளாக கருணாநிதிக்கு தொடர் சிகிச்சை

Forums Inmathi News 4வது நாளாக கருணாநிதிக்கு தொடர் சிகிச்சை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #9681
    Kalyanaraman M
    Keymaster

    உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு 4வது நாளாக, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. அவர் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். தொண்டர்கள் அச்சப்பட தேவையில்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். கருணாநிதி நலமாக உள்ளதாகவும், தொண்டர்கள் அமைதியாக உள்ளதாகவும் துரைமுருகனும் கூறியுள்ளார்.

    மருத்துவமனை வாசலில் தொண்டர்கள், இரவு பகலாக குவிந்துள்ளனர். அவர்கள் கருணாநிதிக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
    மலேஷிய பார்லிமென்ட் சபாநாயகர் விக்னேஸ்வரன், மருத்துவமனை வந்து கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர், கருணாநிதி விரைவில் குணமடையே மலேசிய மக்கள் சார்பில் பிரார்த்தனை செய்வதாக கூறினார்.

    நடிகர் ரஜினி, இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிவார் எனக்கூறப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்த அறிக்கை, மருத்துவமனை சார்பில் இன்று வெளியாகலாம் எனக்கூறப்படுகிறது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This