குளம், குட்டைகளில் மீன் வளர்ப்பவர்கள் அது ஒரு உபரி வருமானமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் அதனை செய்கிறார்கள். ஆனால் மரம்கொத்திகளின் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கும். மரம்கொத்தியிடமிருந்து மீன்களைக் காப்பாற்ற சிலர் வலைகளை போட்டு வைத்திருப்பார்கள். இருந்தாலும் மரம்கொத்திகள் எப்படியாவது புகுந்து மீன்களை கொத்தி செல்லும்.
இந்த பிரச்சனையை தீர்க்க மேட்டுப்பாளையம் அருகே ஒரு விவசாயி சின்ன டெக்னிக் ஒன்றை பயன்படுத்தினார். ட்யூப் லைட்டுகளை சிறு துண்டுகளாக்கி குளத்தில்மிதக்கவிட்டார். அதனைக் கண்ட மரம்கொத்திகள் அதிலிருந்து மீன்களை தூக்கி செல்வதை நிறுத்தியுள்ளன. காரணம் குளத்தில் எதோ வெள்ளையாக மிதக்கவே அதைக் கண்டு அஞ்சி அவை குளத்தை நெருங்கவே இல்லை.