மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 39,000 கனஅடியில் இருந்து 31,411 கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 39,000 கனஅடியில் இருந்து 33,970 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.20 அடியாகவும், நீர் இருப்பு 93.79 டிஎம்சி.,யாகவும் உள்ளது. டெல்டா மாவட்ட கால்வாய் பாசனத்திற்காக 900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 40,000 கனஅடியில் இருந்து 26,000 கனஅடியாக குறைந்துள்ளது.
ஒகேனக்கல் அருவியில் பயணிகள் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் தொடர்ந்து 22 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது