தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட் கிளை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டதா? துப்பாக்கிச்சூட்டுக்கு வாய்மொழி அனுமதி பெறப்பட்டதா? எழுத்துப்பூர்வ அனுமதி பெறப்பட்டதா? 144 தடை உத்தரவு முறையாக மக்களைச் சென்றடைந்ததா? என சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளது.