தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அசம்பாவிதங்களை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 6 ஆயிரம் ஆயுதப்படை போலீசார் உட்பட சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படியும் போலீசாருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.