சிலை கடத்தல்:ஐகோர்ட் உத்தரவு

Forums Inmathi News சிலை கடத்தல்:ஐகோர்ட் உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8988
    Kalyanaraman M
    Keymaster

    சிலை கடத்தல் தொடர்பான வழக்கை இன்று(ஜூலை 30) சென்னை ஐகோர்ட் விசாரித்தது. அப்போது தமிழக அரசு சார்பில் திருத்தப்பட்ட திட்ட அட்டவணை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2019 டிசம்பருக்குள் தமிழகத்தில் உள்ள 242 கோயில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் கட்டி முடிக்கப்படும். 2 வாரத்திற்குள் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனை அடுத்து, முதல்கட்டமாக தஞ்சாவூர், பந்தநல்லூரில் உள்ள கோயிலில் பாதுகாப்பு அறை கட்ட வேண்டும். அறநிலையத்துறை வங்கி கணக்கில் உள்ள ரூ.547 கோடியில் இருந்து பாதுகாப்பு அறை கட்டுவதற்கான நிதி ஒதுக்க வேண்டும். கோயில் சிலைகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ள அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் நேரில் ஆஜராக வேண்டும். சிலை திருட்டு வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகத்தில் சிலை திருட்டு ஆபத்துள்ள கோயில்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட், சிலை பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This