பாசனத்திற்காக பவானிசாகர் அணை மற்றும் மேட்டூர் அணை கால்வாய்களில் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேட்டூர் அணையில் இருந்து புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் இருந்து ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் நீர்திறக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதே போன்று பவானி சாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 28 வரை 120 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் திருச்சி, தஞ்சை, அரியலூர் மாவட்டங்களில் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தவும், மகசூலை பெருக்கவும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.