குமரி மீனவகிராமங்களில் புற்று நோய் குறித்து ஆய்வு செய்யப்படும் என கலெக்டர் தகவல்

Forums Communities Fishermen குமரி மீனவகிராமங்களில் புற்று நோய் குறித்து ஆய்வு செய்யப்படும் என கலெக்டர் தகவல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #8705
  Inmathi Staff
  Moderator

  குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி மீனவர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை வாங்கினார். மீன்வளத்துறை துணை இயக்குனர் லாமக் ஜெயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

  அதில் பேசிய கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறுகையில்,

  குமரி மாவட்டத்தில் 72 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடற்கரை பகுதி உள்ளது. எனவே மற்ற மாநிலங்களை காட்டிலும் குமரி மாவட்டத்துக்கு அரசு அதிக நிதி ஒதுக்கி வருகிறது. கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் கட்டுவதற்கு ரூ.200 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அரசு அதை ஏற்று நிதி ஒதுக்கினால் உடனடியாக கடல் அரிப்பு தடுப்பு சுவர் எழுப்பப்படும்.

  ஒகி புயல் நிவாரண நிதியாக அனைத்து மீனவ குடும்பத்துக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் நிவாரணம் கிடைக்கவில்லை என்று கூறுவதால் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். தவறான வங்கி கணக்கில் நிவாரண தொகை பற்று வைத்ததாக கூறுவது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும். ஒகி புயலில் சிக்கி மீட்கப்பட்ட மீனவர்கள் 71 பேருக்கு நிவாரணம் வழங்க ஆணை வந்துள்ளது. எனவே சில நாட்களில் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

  தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு நடத்தி மணல் திட்டு இருந்தால் கண்டிப்பாக அகற்றப்படும். குமரி மாவட்ட மீனவ கிராமங்களில் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக கூறுகிறீர்கள். எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள். புற்றுநோய் பரவுவது ஆய்வில் தெரியவந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

  மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்களின் கோரிக்கைக்கான பதில்களை இனி முன்கூட்டியே சம்பந்தப்பட்டவர்களுக்கு தபால் மூலம் அனுப்ப முயற்சிகள் எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This