அனல் மின் நிலையத்தால் பாதிப்புள்ளாகும் கடலூர் மீனவர்கள்

Forums Communities Fishermen அனல் மின் நிலையத்தால் பாதிப்புள்ளாகும் கடலூர் மீனவர்கள்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #8703
  Inmathi Staff
  Moderator

  கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் கரிக்குப்பம் க்டற்கரை கிராமம் உள்ளது. இங்கு, ஐஎல்&ஏப்.எஸ் என்ற அனல் மின் நிலையம் ஒன்று உள்ளது. இந்த அனல் மின்  நிலையத்தில் தலா 600 மெகாவாட் வீதம் இரு உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதற்கு காரைக்கால் தனியார் துறைமுகத்திலிருந்து தினசரி லாரிகளில் நிலக்கரி ஏற்றி வருகின்றனர். இவ்வாறு கொண்டுவரப்படும் நிலக்கரிகள் கொண்டு வர மூடப்படாத லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பாஞ்சாங்குப்பம், புதுக்குப்பம், வெலங்கராயன்பேட்டை வழியாக கரிக்குப்பம் பகுதிக்கு எடுத்து செல்லப்படுகிறது. அவ்வாறு எடுத்து செல்லும் வழியில், இந்த நிலக்கரியிலிருந்துள்ள கரித்துகள்கள், மீனவர்களின் குடியிருப்பு பகுதிகள் , கோயில்கள், கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள் மற்றும் வலைகளை கரியாக்கி செல்கின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள மீனவர்கள்  மிகப்பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதுடன், மூச்சுத்திணறலுக்கும் ஆளாகியுள்ளனர்.

  இது குறித்து, தமிழ் நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கடலூர் நிஜாமுதீன் அதிகாரிகள், சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டவற்றுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த  நிலக்கரி கொண்டு செல்லும் முறைக்கு மாற்று முறையை கண்டுபிடிக்க வேண்டும் இல்லையெனில், அனல் மின் நிலையத்தை மூட வேண்டும் என தேசிய மீனவர் பேரவை தலைவர் மா. இளங்கோ கூறியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This