தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் மருத்துவமனைகளில், இன்று(ஜூலை 28) புறநோயாளிகள் பிரிவை புறக்கணிப்பதாக, இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், 4,500 தனியார் மருத்துவமனைகளில், 35 ஆயிரம் டாக்டர்கள், இன்று காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை, புறநோயாளிகள் பிரிவை புறக்கணிப்பர். பிரசவம், அவசர சிகிச்சை, உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவுகள் மட்டும் இயங்கும்.