மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

Forums Inmathi News மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8644
    Kalyanaraman M
    Keymaster

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 69,000 கனஅடியில் இருந்து 68,660 கனஅடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120.30 அடியாகவும், நீர்இருப்பு 93.95 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து 68,498 கனஅடி நீரும், கால்வாய் பாசனத்திற்காக 900 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவும் 70,00 கனஅடியில் இருந்து 66,000 கனஅடியாக குறைந்துள்ளது.

    ஒகேனக்கலில் நீர்வரத்து 67,000 கனஅடியில் இருந்து 64,000 கனஅடியாக குறைந்துள்ளது. ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்கவும், அருவியில் குளிக்கவும் 20 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This