திமுக தலைவர் கருணாநிதி, ரத்த அழுத்த குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; தற்போது அவரது ரத்த அழுத்தம் சீராக உள்ளது’ என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கருணாநிதி உடல் நலம் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மருத்துவமனையில் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
கோபாலபுரம் இல்லத்திலிருந்து, ஸ்ட்ரெச்சர் மூலம் ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்து செல்லப்பட்டார். அங்கு தயார் நிலையில் இருந்த சிறப்பு மருத்துவர்கள் குழு, கருணாநிதியை ஐ.சி.யூ., வார்டில் அனுமதித்து சிகிச்சையை தொடர்ந்தனர். காவேரி மருத்துவமனைக்கு முன்பு தொண்டர்கள் திரண்டனர்; போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.